பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின்  5  நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள்.

Continues below advertisement

சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும்  வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.  பக்தர்களின் வசதியை மேம்படுத்தும் வகையில், 'மாஸ்டர் பிளான்' திட்டம் வகுக்கப்பட்டுள்ளது . பம்பையில் நடந்த சர்வதேச அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் பங்கேற்ற தமிழக அமைச்சர் சேகர்பாபு பேசினார். அப்போது, "கேரளாவும், தமிழ்நாடும் என்றைக்கும் உறவோடு இருக்கிறது. சபரிமலையில் 5 ஏக்கர் இடம் தமிழ்நாட்டுக்கு தர வேண்டும். அது தமிழகத்தை சேர்ந்த ஐய்யப்ப பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். தமிழ்நாடு, கேரளா எல்லையில் உள்ள கண்ணகி கோவிலின் பிரச்சினையை பேசி தீர்க்க வேண்டும்" என்றார்.

Continues below advertisement

மற்றொரு தமிழக அமைச்சரான பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், கேரள அரசு சபரிமலையில் மேற்கொள்ள உள்ள ரயில்பாதை, ரோப் கார், விமான நிலையம் ஆகிய நல்ல திட்டங்களுக்கு தமிழ்நாடு எப்போதும் துணையாக இருக்கும். இந்த சங்கமத்திற்கு அழைத்த கேரள அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் எனக் கூறினார்.

குறிப்பாக  சபரிமலை வளர்ச்சி திட்டங்களுக்கு 1,000 கோடி ரூபாய் செலவிடப்படும்  என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். சுற்றுச்சூழல், பாரம்பரியம், கலாசாரம் உள்ளிட்ட பிரச்னைகளால் மாஸ்டர் பிளானை அமல்படுத்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவயிலுக்காக அமைக்கப்பட்ட திருவிதாங்கூர் தேவசம் போர்டின் 75ம் ஆண்டு விழாவையொட்டி, பம்பா நதிக்கரையில் சர்வதேச அய்யப்ப சங்கமம் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதை துவக்கி வைத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது. செங்கை நகராட்சி வளர்ச்சி பணிகள் 'டெண்டர்' விட்டும் துவங்காத அவலம். உலகம் முழுதும் உள்ள அய்யப்ப பக்தர்களை ஈர்க்கும் வகையில் சபரிமலையில் வளர்ச்சி பணிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சபரிமலை, பம்பா, நிலக்கல் பகுதிகளில் விரிவான வளர்ச்சியை ஏற்படுத்த, 'மாஸ்டர் பிளான்' திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஆன்மிக மற்றும் சன்னிதானத்தின் கலாசார புராதனங்களை பாதிக்காத வகையில் இந்த வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும். இத்திட்டம் சபரி ரயில்வே, சபரிமலை விமான நிலையம், ரோப் கார் என நீள்கின்றன.வளர்ச்சி பணி அதன்படி மூன்று கட்டங்களாக வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

2039 வரையிலான வளர்ச்சி திட்டங்களுக்கு 778.17 கோடி ரூபாய் செலவிடப்படும். பம்பாவை முக்கிய முகாமாக மாற்றுவதற்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 2033க்குள் இரண்டு கட்டங்களாக அங்கு வளர்ச்சி பணிகளை முடிக்க தி ட்டமிடப்பட்டுள்ளது.சன்னிதானம், பம்பா மற்றும் மலைப்பாதையில் வளர்ச்சி பணிகளுக்காக மொத்தம் 1,033.62 கோடி ரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இது தவிர, சபரிமலை மாஸ்டர் பிளான் திட்டத்துக்காக கூடுதலாக 314.96 கோடி ரூபாய் செலவாகும். இவ்வாறு அவர் கூறினார்.