மதுரை உலக பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் வளாக வீதிகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களால் பக்தர்கள், பொதுமக்கள் அச்சம் - மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை.

மதுரையில் தெருநாய் தொல்லையால் பலர் அவதி
 
நாடு முழுவதும் தெரு நாய் தொல்லை அதிகரித்து கொண்டு செல்கிறது. அண்மையில் தெரு நாய்கள் வாகன ஓட்டிகளை பொதுமக்களை கடிக்கும் சம்பவம் தொடர்ச்சியாக அரங்கேறி வரும் நிலையில், மதுரையில் தெருநாய் தொல்லையால் பலர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இரு தினங்களுக்கு முன்பு மதுரை காமராஜபுரம் &  நாகமலை புதுக்கோட்டை பகுதியில் பள்ளிக்குச் சென்ற இரண்டு குழந்தைகளை தெரு நாய் கடித்த சம்பவம் மீண்டும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும். என மக்கள் மதுரை மாநகராட்சி நிர்வாகத்திற்கும் தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில். 
 
பக்தர்களும் & வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
 
 மதுரை உலகப் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில், சுற்றித் திரியும் நாய்களால் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். தினந்தோறும்  நாடு முழுவதும் இருந்து பக்தர்களும் & வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தருகின்றனர்‌. அவர்கள் முகம் சுளிக்கும் விதமாக நாய்கள் கோவில் சுற்றி உள்ள வீதிகளில் உலா வருவதால் அவர்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.
 
பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
 
7 க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கூட்டமாக திரியும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி திரியும் தெரு நாய்களை மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும், கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.