முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில்,”மதுரை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கான தொழில் வாய்ப்புகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் நம்மை வேதனையில் ஆழ்த்துகிறது. ஜனவரி 7,8 சென்னையில் 30 நாடுகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. அதிலே 6.64 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலமாக 15 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 13 லட்சம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பு கிடைக்கும் என திமுக அரசு அறிவித்திருக்கிறது. இதிலே நாம் பார்க்கிறபோது பெரும்பாலான முதலீடுகள் வட மாவட்டங்களுக்கான அறிவிப்புகளாகவே இருக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தபடி தமிழகத்தின் சமச்சீர் தொழிற் வளர்ச்சி என்ற கோட்பாடு அதனுடைய கொள்கை முழுமையாக விட்டுக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
தென்மாவட்ட மக்கள் இன்னைக்கு வஞ்சிக்கப்பட்டு இருக்கின்றார்கள், புறக்கணிக்கப்பட்டிருக்கின்றார் கள் கைவிடப்பட்டு இருக்கின்றார்கள். பொதுவாக மதுரை மட்டும் தான் எந்தவிதமான இயற்கை சீற்றங்களுக்கும், ஆட்படாத தொழில் செய்வதற்கு உகந்த மாவட்டமாக இருக்கிறது அப்படி இருந்தும் கூட தொழில் வளர்ச்சிக்கான எந்தவிதமான முயற்சியும் இந்த திமுக அரசு எடுக்கவில்லை. புரட்சித்தலைவி அம்மாவுடைய ஆட்சியில் மதுரை, தூத்துக்குடி (எக்கனாமிக் காரிடார்) தொழில் வழித்தட திட்டத்தை அறிவித்தார்கள் அதோடு மட்டுமில்லாமல் எடப்பாடியார் ஆட்சிக் காலத்தில் தென்மாவட்டங்களில் தொழில் துவங்வதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்தார். தற்போது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்கள் புறக்கணித்து இருப்பது மிகப்பெரிய கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். ஏற்கனவே இந்த தொழில் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் போடுவதற்கு கூட இந்த மதுரையை முன்னிலைப்படுத்தவில்லை .தென் மாவட்டத்தை முன்னிலைப்படுத்தவில்லை. மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட மக்களை இங்கே ஓரங்கட்டப்பட்டிருக்கிறார்கள், கைவிடப்பட்டிருக்கிறார்கள், வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள், வேலைவாய்ப்பு இளைஞர்களுக்கு இல்லை, பொருளாதார முன்னேற்ற வில்லை, அடிப்படைக் கட்டமைப்புகள் இல்லை, சுகாதார வசதிகள் இல்லை, இங்கே பன்னாட்டு விமான நிலையம் இங்கே கொண்டு வருவதற்கான எந்த முயற்சியாலும் இல்லை.
திமுக அரசே தேர்தல் நேரத்திலே பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளிப்பதும், ஆட்சிக்கு வந்த போதுதான் அதை மறந்து விடுவதும் அவர்களுக்கு வாடிக்கையான ஒன்று. அது போன்று தான் இன்றைக்கு தென் மாவட்ட மக்கள் தொடர்ந்து புறக்கணித்து வருவது நமக்கு வேதனையை அளிக்கிறது.இதற்கு சமச்சீர் தொழில் வளர்ச்சி அளிக்கப்படும் என ஸ்டாலின் ஏற்கெனவேகூறியிருந்தார். தற்போது ஒருபுறத்திலே அதிகமான வளர்ச்சியும்,இன்னொரு புறத்திலே பள்ளமும் ஏற்படுகிற போது அது மிகப்பெரிய அளவிலே பொருளாதார நிலையை சமச்சீர் நிலையை எட்டுவதற்கு இதுபோன்ற நிலைப்பாடுகள் இதுபோன்ற முடிவுகள் மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்தும். ஆகவே வளர்ச்சி அடைந்த பகுதியிலே வளர்ச்சி அடைந்து கொண்டே செல்வதும், பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் மீண்டும் பாதிப்பதும் இது எப்படி சமச்சீர் அந்த நிலையை நாம் எப்படி அடைய முடியும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். எடப்பாடியார் ஆட்சியில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் தொழில் நிறுவனங்களை தென்தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கு பல முயற்சிகளை எடுத்தார்கள் என்பதை தென் மாவட்டம் வளர்ச்சியடைய முழுமையாக முயற்சியை மேற்கொண்டார்.
அதேபோல தென் மாவட்டங்களில் பாலங்கள், சாலைகள், சுற்றுச்சாலைகள், இருவழிச் சாலைகளை நான்கு வழி சாலைகளாக மேம்படுத்துதல், இப்படி கட்டமைப்பு பணிகளை மேம்படுத்தினார். குடிநீர் வசதிகளுக்காக லோயர் கேம்பில் இருந்து குடிநீர் வசதிகளை செய்து கொடுத்தார்கள் கட்டிடங்களை உருவாக்கினார்கள். சுகாதார வசதி உருவாக்கி கொடுத்தார், எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வந்தார்கள் ,இதுபோன்று பல முன்னேற்றங்கள மதுரை வளர்ச்சிக்காக செய்து கொடுத்தார்கள். தற்போது மதுரை வளர்ச்சிக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது. இந்த அரசு அதற்கான முன்னுரிமை வழங்குமா அப்படி இல்லை என்று சொன்னால் மதுரை மக்கள் மட்டும் அல்ல தென் மாவட்ட மக்கள் தகுந்த பாடத்தை புகழ்த்துவார்கள். மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக வருவார் அப்போது தென்தமிழ் நாட்டு மக்களுடைய பொருளாதாரத்தை, வாழ்வாதாரத்தை, தொழில் வளர்ச்சியை ,கல்வி வளர்ச்சியை சமூக வளர்ச்சியை, 100% உறுதிப்படுத்துவார்கள்” என கூறினார்.