கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்தில் 21 சென்ட் நிலத்தினை பதிவு செய்வதற்கு சார்பதிவாளர் மறுப்பதால், ரியல் எஸ்டேட் சங்கத்தினர் விரைவில் போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் முக்கிய தொழிலில் ஒன்றாக ரியல் எஸ்டேட் உள்ளது. மேலும் ரியல் எஸ்டேட் சங்கமும் கொடைக்கானலில் செயல்பட்டு வருகிறது இதனை அடுத்து கடந்த 10 தினங்களாக கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்தில் 21 சென்ட் நிலத்தினை பதிவு செய்வதற்கு சார்பதிவாளர் மறுப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.
இதனால் 20 சென்ட் நிலத்திற்கு மேல் வைத்திருப்பவர்கள் அவசர தேவைக்கு கூட நிலங்களை பிரித்து விற்பனை செய்ய முடியாமல் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வருத்தம் தெரிவிக்கின்றனர். இது குறித்து ரியல் எஸ்டேட் சங்கத்தினர் சார்பதிவாளரிடம் கேட்ட போது பத்திர பதிவு துறை தலைவர் மற்றும் பத்திர பதிவு துணை தலைவரிடம் அனுமதி பெற்று வாருங்கள் என்று பதிவாளர் தெரிவித்ததாக ரியல் எஸ்டேட் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். இதற்கு தமிழக அரசு கவனம் செலுத்தி 21 சென்ட் நிலத்தினை பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் வரும் நாட்களில் போராட்டம் நடத்தப்போவதாக ரியல் எஸ்டேட் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கொடைக்கானல் சார்பதிவாளர் பணியாளர்களிடம் கேட்ட போது தமிழகம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட பண்ணை நிலத்தினை பத்திர பதிவு செய்ய கூடாது என்று துணை பதிவுத்துறை தலைவர் வாய் மொழியாக தெரிவிக்கப்ட்டுள்ளதாகவும், அவ் வாறு பத்திர பதிவு செய்யும் மக்கள் துணை பதிவுத்துறை தலைவரிடம் அனுமதி பெற்ற பிறகு பத்திர பதிவு செய்ய முடியும் என சார்பதிவாளர் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரண பேருந்துகளை விரைவுப் பேருந்துகளாக இயக்க தடை விதிக்க கோரிய வழக்கு - போக்குவரத்து துறை கூடுதல் தலைமை செயலர் பதிலளிக்க உத்தரவு
திருச்சியைச் சேர்ந்த ராஜேந்திரன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் பேருந்து பொது போக்குவரத்து நடக்கிறது. விதிப்படி, எக்ஸ்பிரஸ் பேருந்திற்கு முன்பக்கம் மட்டும் ஒரே படி இருக்க வேண்டும். இருக்கைகள் அகலாமாக இருக்க வேண்டும். அவசர வழி பகுதியில் இருக்கைகள் இருக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகள் உள்ளன.
ஆனால், தமிழகத்தில் அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் தவிர்த்து, இதர அரசுப் போக்குவரத்து கழகங்களின் மூலம் சாதாரண பேருந்துகளையே எக்ஸ்பிரஸ் பேருந்துகளாக இயக்கப்படுகிறது. இது மோட்டார் வாகன சட்டப்படி தவறு. எனவே, சாதாரண பேருந்துகளை எக்ஸ்பிரஸ் பேருந்துகளாக இயக்கத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயசந்திரன் அமர்வு வழக்கு குறித்து போக்குவரத்து துறை கூடுதல் தலைமை செயலர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 3 வாரம் ஒத்திவைத்தனர்.