எப்படி வயிற்றுப் பசிக்கு சத்துணவு திட்டம் இருந்தது, அதேபோல் மாணவர்கள் அறிவுப் பசிக்கு மடிக்கணினி திட்டம் இருந்தது. ஆனால் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக அந்த திட்டம் முடக்கி வைக்கப்பட்டது.

 


காவிரி, வைகை குண்டாறு இணைப்பு திட்டம்


முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘14,400 கோடி  செலவில் விவசாயிகள் உடைய 100 ஆண்டு கால கோரிக்கையான காவிரி, வைகை குண்டாறு நதிகள் இணைப்பு திட்டம், வறட்சி மாவட்டங்களான ராமநாதபுரம், சிவகங்கை புதுக்கோட்டை போன்ற இந்த தென்தமிழ் நாட்டு மக்களுடைய வாழ்வாதாரத்திற்கும் அவர்களுடைய ஜீவாதாரத்திற்கும் அடித்தளமாக உள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இந்த திட்டத்தை எடப்பாடியார் தொடங்கி வைத்தார். ஏறத்தாழ இந்த காவிரி, வைகை குண்டாறு இணைப்பு திட்டம் என்பது ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 50 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள். வெள்ளம் ஏற்படும் காலங்களில் காவிரி கொள்ளிடம் ஆறுகளில் 40 டிஎம்சிக்கு மேல் உபரி நீர் கடலிலே கலக்கிறது. இந்த நீரை கால்வாய் மூலம் புதுக்கோட்டை ஒன்றுபட்ட ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு கொண்டுவர இந்த இணைப்பு திட்டம் வரப்பிரசாதமாக அமைந்திருந்தது. ஆகவே  மத்திய அரசு தொடர்ந்து இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்காத காரணத்தினால் தமிழக அரசு முழுமையான நிதி ஒதுக்கி காவிரி குண்டாறு திட்டத்தை செயல்படுத்தி, எடப்பாடியார் ஆட்சி காலத்திலே 14,400  கோடியில் திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக  700 கோடியை ஒதுக்கி, புதுக்கோட்டை கரூர் மாவட்டங்களில் கையப்படுத்தப்பட்ட நிலங்களில்  11 கிலோ மீட்டர் கால்வாய் வெட்டும் பணி மேற்கொள்ள 331 கோடி ஒப்பந்தம் இடம்பெற்றது. புதுக்கோட்டை குன்னத்தூரில் இருந்து கவிநாடு வெள்ளாறு வரை 52 கிலோ மீட்டருக்கு நிலம் கைய படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. 50 லட்சம் விவசாயிகள் பயனடைகின்ற இந்த திட்டம் இப்போது அரசியல் காழ்புணர்ச்சி  காரணமாக இந்த திட்டத்தை கிடப்பிலேயே போடப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது.

 

மடிக்கணினி திட்டம்


மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டத்தை ரத்து செய்து மாணவர்களை வஞ்சித்திருக்கிற இந்த அரசு அதற்கு சொல்லுகிற காரணம் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை. முதலமைச்சர் 234 தொகுதிகளும் எனக்கு ஒரே மாதிரி தான் என்று அவர் பேசியுள்ளார். இன்றைக்கு அவர் எவ்வளவு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு திட்டங்களை முடக்கி வருகிறார், என்பதற்கு எங்களால் பட்டியல்களை  மக்களிடத்திலே சமர்ப்பிக்க வேண்டிய கடமை இருக்கிறது. எப்படி வயிற்றுப் பசிக்கு சத்துணவு திட்டம் இருந்தது அதேபோல் மாணவர்களுக்கு அறிவுப் பசிக்கு மடிக்கணினி திட்டம் இருந்தது. ஆனால் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக அந்த திட்டம் முடக்கி வைக்கப்பட்டது. அதே போல் தாலிக்கு தங்கம் திட்டம், கறவை பசு ஆடுகள் திட்டம், குடிமாரமத்து திட்டம் எல்லாவற்றையும் கிடப்பில் போட்டுவிட்டு 234 தொகுதிகளிலும் சமமாக பார்ப்பேன் என்று முதலமைச்சர் பேசுவது பசுந்தோல் போர்த்திய புலியாகத்தான் உள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் வளர்ச்சி காண திட்டங்களை அதிமுக அரசு கொண்டு வந்தது என்ற ஒரே காரணத்திற்காக திமுக அரசு முடக்கி வைப்பது மக்களுக்கு  பச்சை துரோகம் செய்வதாகும்” என்றார்.