தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு மதுரையில் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: அ.தி.மு.க., தேர்தல் தயாரிப்பு குழு நாளை மதுரை மண்டல  மக்களிடம் கருத்துக்களை கேட்க உள்ளது. 6 மண்டலங்களில் அ.தி.மு.க., தேர்தல் தயாரிப்பு குழுவிற்கு அதிக அளவில் கோரிக்கை வைத்தனர் இதன் மூலம் அ.தி.மு.க., மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று தெளிவாக தெரிந்துள்ளது. திமுக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 100 வாக்குறுதிகளை அளித்தது. குறிப்பாக மொழி சார்ந்த பிரச்னைகள், முல்லை பெரியார் கச்ச தீவு போன்றவற்றை கூறினார்கள் அந்த தேர்தலில் 38 திமுக கூட்டணி நாடாளுமன்ற வேட்பாளர்கள் வெற்றி பெற்றவர்கள் ஆனால் மக்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. மக்கள் நம்பிக்கை சிதைக்கப்பட்டது இதில் மாநில அரசு  நிறைவேற்றக்கடைய கடமையை கூட நிறைவேற்றவில்லை. மக்களின் நம்பிக்கையை சிதறடிக்கும் வகையில், திமுகவின்  நாடாளுமன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.


அரசுப் பள்ளிக்கு ஒன்றரை ஏக்கர் நிலத்தை வழங்கிய பெண்! - சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்த மதுரை எம்.பி




இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக ஓ.பி.எஸ்., தெரிவித்தது குறித்த கேள்விக்கு


ஓ.பி.எஸ்., மன குழப்பம் உள்ளது. அவருக்கு மூளை குழம்பியுள்ளது. அவர் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். நேற்று வரை பெரிய பொறுப்பில் இருந்தவர் பாவம். திடீரென பொதுக்குழு எடுத்த ஒழுங்கு நடவடிக்கை காரணமாக அதிர்ச்சிக்கு உள்ளாகி, நிராயுதபாணியாக உள்ளார் என்றார்.




கூட்டணி கதவுகள் திறந்திருப்பதாக அமித்ஷா தெரிவித்தது குறித்த கேள்விக்கு


அதிமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டு விட்டது. பாஜகவுடன் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என அறிவிக்கப்பட்டு விட்டது. அண்ணாவை, அம்மாவை பற்றி அண்ணாமலை பேசிய பின்னரும் தன்மானத்தை இழந்து எங்களால் அவர்களுடன் இருக்க முடியாது. இயக்கத்தின் மதிப்பீடு அவருக்கு தெரியவில்லை. கவுன்சிலர் கூட ஜெயிக்காதவர் அவர். அரசியல் அனுபவம் அவருக்கில்லை. தேர்தலில் நின்று வென்றால் தான் பக்குவம் வரும். லேகியம் விற்பவர் மாதிரி பேசி கொண்டிருக்கிறார். அதிமுகவை அழிக்க அண்ணாமலை அல்ல, அவரது அப்பனே வந்தாலும் முடியாது. இது 2 கோடி தொண்டர்களின் எச்சரிக்கை. ஆண்டவனே வந்தாலும் அதிமுகவை தொட்டுப்பார்க்க முடியாது. பொறுமைக்கு ஒரு அளவு இருக்கிறது தம்பி. நாங்கள் பேச ஆரம்பித்தால் வேஷ்டியை கழட்டி விட்டு நீ ஓடி விட வேண்டும், கட்சிக்கு கட்டுப்பட்டு இருக்கிறோம். அண்ணாமலையிடம் பிரதமர் மோடி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.



மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Zak Crawley: 10 ஆண்டுகளில் இது மூன்றாவது முறை மட்டுமே.. இந்திய மண்ணில் ஜாக் கிராலி தனித்துவ சாதனை படைப்பு!


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Ind vs Eng 2nd Test: இங்கிலாந்தை ஓடவிட்ட இந்தியா; இரண்டாவது டெஸ்ட்டில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி