பராமரிப்பு பணி காரணமாக பரமக்குடி மற்றும் இராமேஸ்வரம் இடையே பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரயில் சேவைகள் பகுதி ரத்து - PARTIAL CANCELLATION OF TRAIN SERVICES
பராமரிப்பு பணிகளுக்கான மின்தடை காரணமாக, இன்று (14.10.2025) ரயில் சேவைகளில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரயில் எண் 56711 மதுரை ஜங்ஷன் – இராமேஸ்வரம் பயணிகள் ரயில், மதுரை ஜங்ஷனில் இருந்து காலை 06.50 மணிக்கு புறப்படும் இது, பரமக்குடி மற்றும் இராமேஸ்வரம் இடையே பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த ரயில் சேவையும் இராமேஸ்வரம் மற்றும் பரமக்குடி இடையே பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரயில் எண் 56714 இராமேஸ்வரம் – மதுரை ஜங்ஷன் பயணிகள் ரயில், இராமேஸ்வரத்தில் இருந்து காலை 11.40 மணிக்கு புறப்பட வேண்டியது, இன்று பரமக்குடியில் இருந்து மதியம் 01.25 மணிக்கு (13.25 மணி) தனது பயணத்தை தொடங்கும். இந்த ரயில் சேவையும் இராமேஸ்வரம் மற்றும் பரமக்குடி இடையே பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.