மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச கண் மருத்துவ பரிசோதனை மற்றும் கண் கண்ணாடிகள் வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அரவிந்த் கண் மருத்துவமனை
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில், மதுரை மாநகராட்சி மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச கண் மருத்துவ பரிசோதனை மற்றும் கண் கண்ணாடிகள் வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆணையாளர் சித்ரா விஜயன், முன்னிலையில் இன்று (13.10.2025) மேற்கொள்ளப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அரவிந்த் கண் மருத்துவமனை (குழந்தைகள் கண் மருத்துவத் துறை தலைவர்) மருத்துவர். விஜயலெட்சுமி பெற்றுக் கொண்டனர்.
மாணவிகள் புத்தாக்கம்
மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 26 ஆரம்பபள்ளிகள், 14 நடுநிலைப்பள்ளிகள், 9 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 15 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 64 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. மேயர், ஆணையாளர் ஆகியோர் வழிகாட்டுதலின் கீழ் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ. மாணவிகள் புத்தாக்கம் பெறுவதற்கு மாநகராட்சியின் சார்பில் விளையாட்டு போட்டிகள், மாவட்ட அளவில் மற்றும் மாநில நடைபெறும் பல்வேறு குறு விளையாட்டு போட்டிகள், உயர்கல்வி வழிகாட்டுதல், மற்றும் மேஜிக் ஷோ, புத்தகம் வாசிப்பு, பசுமை நடைபயணம், ஐதராபாத் அறிவியல் மையம், இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சுற்றுப்பயணம் உள்ளிட்டவை தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் உடல் நலத்தை காக்கும் பொருட்டு அரவிந்த கண் மருத்துவமனை சார்பில் கடந்த ஜூன் மாதம் முதல் பள்ளிகளில் நேரடியாக சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு அதில் 226 பார்வை குறைபாடு உடைய மாணவ, மாணவிகளில் கண்டறியப்பட்டு கடந்த 26.08.2025 அன்று மேயர், ஆணையாளர் ஆகியோர் தலைமையில் இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆணையாளர் முன்னிலையில் கையொப்பம் இடப்பட்டது
அதன் தொடர் நிகழ்வாக மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் உடல் நலத்தை காக்கும் பொருட்டு மதுரை மாநகராட்சி மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் மருத்துவபரிசோதனை மற்றும் கண்கண்ணாடிகள் வழங்குவதற்கான (ஐந்து ஆண்டு காலம்) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆணையாளர் அவர்கள் முன்னிலையில் இன்று (13.10.2025) கையொப்பம் இடப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர். விஜயலெட்சுமி அவர்களிடம் ஆணையாளர் அவர்கள் வழங்கினார்கள். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதால் பள்ளி மாணவ, மாணவிகளின் உடல் நலனையும் கல்வித் திறனையும் மேம்படுத்தும். இந்நிகழ்வில் துணை ஆணையாளர் ஜெய்னுலாபுதீன், அரவிந்த் கண் மருத்துவமனை குழந்தைகள் கண் மருத்துவத் துறை தலைவர் மருத்துவர்.விஜயலெட்சுமி, கல்வி அலுவலர் ஜெய்சங்கர், முதன்மை மருத்துவ அலுவலர் மரு.ஸ்ரீகோதை, அர்விந்த் கண் மருத்துவமனை திட்ட மேலாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.