பெரியகுளம் அம்மா உணவகத்திலிருந்து வெளியேறும் கழிவுகளால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாகவும் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் நகராட்சியின் 26வது வார்டின் காய்கறி மார்க்கெட் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு செயல்படும் அம்மா உணவகத்தால் மார்க்கெட்டில் பணியாற்றும் கூலி தொழிலாளிகள், சுமை தூக்குவோர், அப்பகுதியில் ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 100கும் மேற்பட்டோர் காலை, மதியம் என இரண்டு வேளையும் நாள்தோறும் பசியாறி வருகின்றனர்.




இந்நிலையில் அம்மா உணவகத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் பாதாள சாக்கடை கழிவு நீரும் கலந்து உணவகத்தின் வாயில் முன்பாக கடந்த 10 நாட்களாக பொங்கி வெளியேறி வருவதால் , அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, உணவருந்த செல்பவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து அம்மா உணவகத்தில் பணியாற்றும் பெண்கள் நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காத நிலையில் உள்ளது.




மேலும் சாலையில் உணவக கழிவுநீர் மற்றும் பாதாள சாக்கடை கழிவுநீர் கலந்து வெளியேறுவது குறித்த அப்பகுதி மக்கள் கூறுகையில், ’’உணவகத்தின் வாயில் முன்பாக உணவக கழிவு நீர் மற்றும் பாதாள சாக்கடை கழிவுநீர் கலந்து வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது. அத்தோடு அதனை மிதித்து உணவகத்திற்குள் உணவருந்த செல்லும் கூலி தொழிலாளிகளுக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது.


இது உணவு அருந்த செல்பவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது, இந்தக் கழிவு நீரால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் துர்நாற்றத்துடன் வியாபாரம் செய்ய வேண்டிய நிலையும் சாலையில் செல்வோருக்கும் துர்நாற்றதை கடந்து செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. அம்மா உணவகம் முன்பாக சுகாதாரமற்ற முறையில் கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண