புதுக்கோட்டை மாவட்டத்தில் இறந்து போன இளம் பெண்ணின் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரிய வழக்கில், மருத்துவ பரிசோதனை முடித்து உறவினர்கள் உடலை பெற்று அடக்கம் செய்ய வேண்டும், இல்லையெனில்  மாவட்ட நிர்வாகம் சார்பாக உடலை அடக்கம் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

 

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள பல்லவராயன்பத்தை கிராமத்தைச் சேர்ந்தவர் திருச்செல்வம் மனைவி பழனியம்மாள் (35)  கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. இவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ள இந்நிலையில் கடந்த 23ம் தேதி அவரது மகள்களை கணவர் வீட்டிலே விட்டுவிட்டு தனது தந்தை வீட்டுக்கு செல்வதாக பழனியம்மாள் கூறிவிட்டு சென்றவரை காணவில்லை பல இடத்தில் தேடியும் கிடைக்காத நிலையில்  பல்லவராயன்பத்தை ஊராட்சிக்கு உட்பட்ட தொம்பராம்பட்டி பாதறைக்குளம் செல்லும் சாலையோரமாக உள்ள மதியழகன் என்பவருக்கு சொந்தமான ஆர்எஸ்பதி காட்டில் அழுகிய நிலையில்  சடலமாக மீட்டு   பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இந்நிலையில்  கொலையாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்  குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டும்  உறவினர்கள் போராட்டத்தில்  ஈடுபட்டு உடலை வாங்க மறுத்தனர்.

 

இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளைகள் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட கோரி திருச்செல்வம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி சக்தி குமார் சுகுமார குரூப் முன்பு விசாரணைக்கு வந்தது.

 

அரசு தரப்பில், வழக்கு குறித்து முழு விசாரணை நடைபெற்று வருகிறது. இறந்து போன பெண்ணின் உடலை புதுக்கோட்டை மருத்துவ கல்லூரியிலுள்ள மருத்துவ நிபுணர்கள் உச்ச நீதிமன்ற வகுத்துள்ள விதிமுறையின் படி பிரேத பரிசோதனை செய்துள்ளனர். மேலும் குற்றவாளிகளின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது வழக்கு விசாரணை முறையாக நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

 

இதனைத் தொடர்ந்து நீதிபதி, இறந்து போன பெண்ணின் உறவினர்கள் மன அழுத்தில் உள்ளனர். பெண் இறந்ததை அரசியலாக்கி வருகின்றனர் இது இறந்து போனவருக்கு செலுத்தும் அவமரியாதையாகும் இறந்து போனவரின் உடலை வைத்து அரசியல் ஆதாயம் தேடக்கூடாது என கூறிய நீதிபதி, இறந்து போன பெண்ணின் உடல் மிகவும் அழுகிய நிலையில் உள்ளதை தொடர்ந்து மருத்துவக் கல்லூரியில் பின அறையில் வைக்க முடியாது எனவே மருத்துவ பரிசோதனை முடிந்தவுடன் உடனடியாக உறவினர்கள் பெண்ணின் உடலை பெற்று உரிய முறையில் இறுதி சடங்குகள் செய்ய வேண்டும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்தால் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் இணைந்து அந்த பெண்ணிற்கு உரிய முறையில் சடங்குகளை செய்து உடலை அடக்கம் செய்யலாம் என உத்தரவிட்டார். பாதிக்கப்பட்டவருக்கு அரசு வழங்கும் இழப்பீடு தொகையை பெற்றுக் கொள்ளலாம்  எனக் கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தனர்.