இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்து இருந்தேன். இதற்கான மத்திய அரசின் அனுமதியும் தற்போது கிடைத்துள்ளது. இதன் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன.






இந்த சூழ்நிலையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவியினை செய்ய வேண்டிய தருணம் இது. எனவே மனிதாபிமான அடிப்படையில், இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” என தமிழ்நாடு முதல்வர் தெரிவித்திருந்தார்.




இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பொதுமக்கள் பசிபட்டினியோடு உணவு, மருந்து உள்ளிட்டவற்றிற்கும் அவதிப்பட்டு வருகின்றனர். கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி உணவு மட்டும் அடிப்படைத் தேவை பொருட்கள் கிடைக்காமல் பரிதவிக்கின்ற இலங்கை மக்களுக்கு, தமிழக அரசு சார்பில் மனிதாபிமான அடிப்படையில்  நிதி மற்றும் பொருள் உதவி அளிப்பது என முதல்வர் அறிவித்து இருந்தார். தாராளமாக உதவும்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து இருக்கின்றார். இலங்கை மக்களுக்காக தனது உண்டியல் சேமிப்பு பணத்தை கொடுத்த 7 வயது சிறுவனுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.






இந்நிலையில் மதுரை மேலனுப்பானடியை சேர்ந்த சமூக ஆர்வலரான அசோக்குமார் என்பவரின் 7 வயது மகன் சுதர்சன் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 611ரூபாயை இலங்கை மக்களுக்காக கொடுக்க முதல்வரின் நிவாரண நிதிக்கு கொடுக்க முன் வந்துள்ளார். மேலும் சமூக ஆர்வலரான அசோக்குமார் தனது ஒருநாள் வருமானமான 600 ரூபாயை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளிக்க உள்ளார்.

 



சிறுவயதிலேயே உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு தனது உண்டியல் சேமிப்பு பணத்தை இலங்கை மக்களுக்காக அளிக்க முன்வந்த 7 வயது சிறுவனின் செயலை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.