தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் திண்டுக்கல்லில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .பின் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது,

Continues below advertisement




ஆளுங்கட்சி வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்றே கூறுவார்கள். யாரும் வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை என கூற மாட்டார்கள். கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது தான் கேள்விக்குறி? 95% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என திமுக கூறலாம். ஆனால் எதிர்க்கட்சிகள் மக்கள் இதனை ஒப்புக் கொள்ளவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பது மக்கள் கருத்தாக பார்க்கிறேன்.


200 தொகுதிகளுக்கு மேல் திமுக, அதிமுக கட்சிகள் வெற்றி பெறுவோம் என கூறுவது குறித்த கேள்விக்கு,


தேமுதிக - வும் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்பது அந்தந்த கட்சிகளின் நம்பிக்கை மற்றும் நிலைப்பாடு அதனைக் குறை சொல்லக்கூடாது. தேமுதிக கூட்டணி அமைக்கும் கட்சி தான் இந்த முறை வெற்றி பெறும், ஆட்சி அமைக்கும் இது எங்களின் நம்பிக்கை.


SIR தமிழ்நாடு முழுவதும் பேசப்படுகிறது. வாக்குகள் திருடப்படுகிறது. இருக்கின்ற வாக்குகள் நீக்கப்படுகிறது. போன்ற பல்வேறு கருத்துகளை தினம்தோறும் பார்த்து வருகிறோம். தேர்தல் சமயத்தில் இது போன்ற குற்றச்சாட்டுகள் வருவது முதல் முறை அல்ல. கட்சி ஆரம்பித்து 20 வருடங்களாக அனைத்து தேர்தல்களையும் சந்தித்து வருகிறோம். தேர்தலில் பல்வேறு தவறுகள் நடப்பது உண்மை. அதனை யாரும் இல்லை என்று கூற முடியாது. ஆதாரப்பூர்வமாக தேர்தல் அதிகாரியை சந்தித்து முறையிட்டுள்ளோம். அதற்கு நடவடிக்கை எடுத்ததே இல்லை. 


ஆளுங்கட்சி தவறுகள் நடக்கவில்லை எனக் கூறுவதும் எதிர்க்கட்சி தவறு நடந்துள்ளது எனக் கூறுவதும் இயல்புதான். இதனை சரியான முறையில் கொண்டு செல்ல வேண்டியது தேர்தல் ஆணையத்தின் வேலை. நேர்மையான முறையில் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதுதான் தேமுதிகவின் நிலைப்பாடு.


பணி சுமை காரணமாக தற்கொலை என்பதை கடந்து போக முடியாது. இதுகுறித்து ஆராய வேண்டும். மொத்த இந்தியாவில் 2 பேர் செய்துள்ளனர். மற்ற இடங்களில் அதனை ஏற்றுக்கொண்டு செல்கின்றனர். 2 பேருக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். ஆட்கள் அதிகமாக அமைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.


பிரதமர் தமிழ்நாடு வருகை குறித்த கேள்விக்கு,


பிரதமர் வருகையை வரவேற்கிறேன். விவசாய மாநாட்டில் கலந்து கொள்வது என்பது விவசாயிகளுக்கான பெருமையாக பார்க்கிறேன். தேமுதிக விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் பக்க பலமாக இருப்போம். விவசாயிகளுக்காக வருவது வரவேற்கத்தக்கது. 


தேமுதிக கூட்டணி குறித்த கேள்விக்கு,


தேமுதிக கூட்டணியில் தெளிவாக இருக்கிறோம். தேமுதிக அடுத்த தேர்தலுக்கு தயாராகி வருகிறது. மறைந்த விஜயகாந்த் குரு பூஜை மற்றும் அதன் பின்பு கடலூர் மாநாடு அதற்கான பணிகளை செய்து வருகிறோம். கட்சி வளர்ச்சி மற்றும் தேர்தலுக்கு தயாராகி வருகிறோம் எனக்கூறினார் .


தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு குறித்த கேள்விக்கு


தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு கேள்விக் குறியாகவே உள்ளது. தமிழ்நாட்டில் கொலைகள், பாலியல் வன்கொடுமை, லாக்கப் இறப்பு, டாஸ்மார்க், போதைகள், இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பது, என்ன பல்வேறு பிரச்சனைகள் நடந்து வருகிறது. இதற்கு ஆளுங்கட்சி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனக்கூறினார் .


அதிமுக மற்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்பி உதயகுமார் சந்திப்பு குறித்த கேள்விக்கு,


ஆர்பி உதயகுமார் தாயார் இறந்தபோது அதற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரை சந்தித்தேன். அந்த வகையில் என்னுடைய தாயார் இறந்ததற்கு அவரால் நேரடியாக வர முடியவில்லை. அதற்காக என்னை மதுரையில் சந்தித்து அஞ்சலி செலுத்தினார்.  இது நட்பு ரீதியான சந்திப்பு மட்டுமே.


த.வெ.க கட்சித் தலைவர் விஜய் வருகை திமுக அதிமுக எந்த கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்ற கேள்விக்கு,


No Comments. மற்ற கட்சிகளை உயர்த்தும் கட்சி நாங்கள் இல்லை. இதை விஜய் இடம்தான் கேட்க வேண்டும்.


மழையால் நெல் நனைந்த சதவீதத்தை உயர்த்த வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் வைத்த கோரிக்கை குறித்த கேள்விக்கு,


லாரியில் நெல் மூட்டை இருக்கும் பொழுது நனைந்து முளைக்க தொடங்கியுள்ளது. விவசாயம் செய்து உழைத்த நெல் கண் முன்னே வீணாக போவது என்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 


நெல் ஈரப்பத சதவீதத்தை உயர்த்த வேண்டும். விளைவிக்கின்ற அனைத்து நெல் மூட்டைகளையும் பாதுகாப்பாக வைப்பதற்கு இடம் தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும். இதனை மத்திய மாநில அரசுகள் இணைந்து கட்டாயம் உருவாக்க வேண்டும்.அவ்வளவு புறம்போக்கு இடங்கள் இருந்து வருகிறது நெல் கொள்முதல் செய்ய குடோன்கள் ஏன் உருவாக்க கூடாது? அதற்கான விலையை ஏன் நிர்ணயம் செய்யக்கூடாது. விவசாயிகள் வாழ்ந்தால் தான் நாடும், மக்களும் வாழ முடியும்.




அரசு ஊழியர்கள் போராட்டம் குறித்த கேள்விக்கு,


மக்கள் நல பணியாளர்கள் சென்னையில் தொடர் போராட்டம் நடத்தினர். ஆசிரியர்கள் செவிலியர்கள் மீனவர்கள் மருத்துவர்கள் அனைத்து இடங்களிலும் கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடந்து வருகிறது.மக்கள் நல பணியாளர்கள் போராட்டத்தின் போது தேமுதிக கால் உலகத்தில் தங்க வைத்து உணவு கொடுத்துள்ளோம்.ஆனால் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் தான் அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.அனைத்து ஊழியர்களும் பணி நிரந்தரம், ஊதிய நிரந்தரம் தான் கேட்டுள்ளனர். அதைப் பற்றி கூறாமல் உணவு இரண்டு வேலை கொடுக்கிறோம் என அரசுக்கு கூறுகிறது. சாப்பாடு என்பதை வரவேற்கிறோம். ஆனால் அவர்கள் கேட்கும் கோரிக்கைகளிலும் அரசு நிறைவேற்ற வேண்டும் எனக்கூறினார்.


SIR குறித்த கேள்விக்கு,


அனைவரும் தங்களது வாக்குரிமையை சரிபார்க்க வேண்டும். நமது வாக்குரிமையை யார் பறிக்க முடியும்? வாக்குரிமையை ஏன் நீக்கினீர்கள்? என கேள்வி எழுப்புங்கள். யாரும் யாருடைய வாக்குகளையும் நீக்க முடியாது. நமது வாக்குரிமை உறுதிப்படுத்த வேண்டும். நமது ஓட்டை நாம்தான் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். யாரையும் குறை சொல்ல முடியாது. ஆதார் தான் நமது அடையாளம் என்றால் வாக்குரிமையும் நமது அடையாளம். ஒவ்வொரு தனிநபரும் அதனை சரி பார்த்து உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது எனக்கூறினார்.