பொங்கல் பண்டிகை , தொடர் விடுமுறை தினங்கள் எதிரொலியால் திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி முருகன் கோவில், கொடைக்கானல் பகுதியில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.

பழனிக்கு படையெடுக்கும் பக்தர்கள்

பொங்கல் தொடர் விடுமுறையையொட்டி இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை தந்தும், மலை அடிவாரம், பாதவிநாயகர் கோவில், கிரிவலபாதைகளில் அலகு குத்தியும், காவடிகள் எடுத்தும் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்து வருகின்றனர். படிப்பாதை, யானை பாதைகளில் செல்போன் கொண்டு செல்லாதவாறு ஆண்கள், பெண்கள் என இரு வரிசைகளாக பிரிக்கபட்டு சோதனை செய்த பின்னர் மலைக்கோவிலுக்கு அனுப்பி வருகின்றனர்.

100 நாள் வேலைத் திட்டத்தை குறைக்க ஊராட்சிகள் தரம் உயர்வா? சட்டசபையில் அமைச்சர் பரபரப்பு பதில்

பக்தர்கள் எளிதாக செல்லும் வகையில் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக மலைக்கோவில் செல்லவும், படிப்பாதை வழியாக கீழே இறங்கி வரும் ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மின் இழுவை ரயில், ரோப் கார் நிலையங்களில் ஏராளமான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து மலை கோவிலுக்கு சென்று சுமார் 3 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. மேலும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Erode East Bypoll: பயம்..! திமுக+ மீதா? தோல்வி மீதா? இடைத்தேர்தலை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள், யாருக்கு லாபம்?

இதேபோல்  திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உலகப்புகழ்பெற்ற சுற்றுலா தலமான மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும், குளிர்ச்சியான சூழலை அனுபவிப்பதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் வெள்ளி நீர்வீழ்ச்சி, நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றுக்கு சென்று பார்வையிடுகின்றனர். இங்கு வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, பில்லர் ராக், குணா குகை, பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். தொடர் விடுமுறை நாட்களில் கொடைக்கானலுக்கு அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகை தருவதுண்டு. குறிப்பாக கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருவார்கள்.

Indian Cricket Team: இனி விக்கெட் மழை தான்..! கம்பேக் கொடுத்த ஷமி, இங்கி., எதிரான டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு

இந்த நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் விடுமுறை தினங்களால் பல்வேறு பகுதியிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக மூஞ்சிக்கள், கல்லறை மேடு, ஏரிச்சாலை, அப்சர் வேட்டரி, உகார்த்தே நகர், செண்பகனூர் மற்றும் முக்கிய நகர் பகுதிகளில் சாலைகளின் இரு புறங்களிலும் நீண்ட வரிசையில் சுற்றுலாப்பயணிகளின் வாகனங்கள் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் அணிவித்து ஊர்ந்து செல்கின்றன.