தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாள். தை முதல் நாளில் விவசாயத்திற்கு உயிர் நாடியாக விளங்கும் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என பஞ்சபூதங்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவே தை ஒன்றாம் நாள் தை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தை இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மாட்டு பொங்கல் அன்று கால்நடைகளுக்கு குறிப்பாக மாடுகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அதாவது விவசாயத்திற்கு உழுதல் போன்றவைகளுக்கு பயன்படும் இந்த விலங்கினங்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த மாட்டுப் பொங்கல் அன்று இளங்கன்றுகள், ஜல்லிக்கட்டு காளைகள், பசு மாடுகள், விவசாயத்திற்கு உழுதல் பயன்படும் காளைகள் என மாடுகள் மற்றும் விலங்கினங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இந்த மாட்டுப்பொங்கல் ஆனது கொண்டாடப்பட்டு வருகிறது. அப்படி கொண்டாடப்படும் மாட்டுப் பொங்கலானது தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள மாடுகளுக்கு என அமைக்கப்பட்ட ஒரு கோவிலை பற்றிய சிறப்பு தொகுப்பாக பார்க்கலாம். தேனி மாவட்டம் கம்பம், ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது ”நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத்தொழுவம்” எனும் மாடுகளுக்கு என அமைக்கப்பட்டுள்ள இந்த கோவிலில் மாடுகளை மட்டுமே வைத்து கோவிலாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
தம்பிரான் மாடு என்று அழைக்கப்படும் பசு மாடுகளை ஒரு தொழுவத்தில் வளர்க்கும் வழக்கத்தை இப்பகுதி மக்கள் பல நூற்றாண்டு காலங்களாக வழக்கமாக கொண்டு வருகின்றனர். இந்த தொழுவத்தில் வளர்க்கப்படும் மாடுகள் இறந்தால் அங்கேயே புதைக்கப்படுவது வழக்கமாக கொள்கின்றனர். மேலும் இந்த மாட்டுத் தொழுவில் உள்ள ஒரு காளையை தேர்ந்தெடுத்து அந்த காளை ராஜகாளை அதாவது பட்டத்துக்காளை என பெயர் சூட்டப்படும். அப்படி பட்டம் சூட்டப்படும் காளைக்கு மாட்டுப்பொங்கலன்று அரசனுக்கு கொடுக்கப்படும் பட்டத்து மரியாதை செய்து வருடந்தோறும் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்வில் கம்பம் பகுதி மட்டுமல்லாமல் பல்வேறு கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் இருந்து வந்து மாட்டை வழிபட்டு செல்வது தொடர்ந்து வருகிறது. இந்த நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத்தொழு என்னும் 400 மாடுகள் என தற்போது வரையில் உள்ளன. அவைகளுக்கு தலைவனாக விளங்குவதுதான் இந்த பட்டத்து காளை. அதனை தேர்வு செய்யும் முறை மிகவும் சுவாரஸ்யமான ஒன்று.
அதுவும் வரலாற்று தொடர்பு உள்ளதாகவும் கூறப்படுகின்றன. தேவர்களின் பசு என்று பொருள் கொண்ட இந்தப் படத்துக்காளை பசுக்கள் ஈன்ற கன்றுகளிலிருந்து பட்டத்துக்காளையை தேர்வு செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கோவிலில் ஒவ்வொரு மாட்டுப்பொங்கலன்று தங்கள் வீடுகளில் ஈன்று இருக்கும் சிறு கன்றுகள் இந்த கோவிலில் தானமாக வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. மாட்டு பொங்கலன்று மாடுகளுக்கென கோவில் அமைக்கப்பட்டு தனி மரியாதை செலுத்தும் இந்த மாட்டு தொழுவில் மாட்டுபொங்கல் திருவிழா கொண்டாட ஏற்பாடுகள் தீவிரப்பட்டுத்தப்பட்டுள்ளது.