8ஆம் தேதி ஜூலை 2022 அன்று அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான அறிவிப்பு வெளியானது. இதை ரத்து செய்ய கோரிய வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரிய சேர்மன் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.


மதுரையை சேர்ந்த விநாயகர்மூர்த்தி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாக்கல் செய்த மனுவில், நான் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை, பின் பிஎஸ்சி கணிதம், எம்எஸ்சி கணிதம்  ஆகிய படிப்புகள் தமிழ் வழியில் கல்வி கற்றேன்.


2019 நவம்பர் 29ஆம் தேதி அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு ஆசிரியர் வேலைக்கான 1060 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு ஆசிரியர் பணிக்காக தமிழ் வழி இட ஒதுக்கீட்டின் கீழ் பதிவு செய்தேன். பின் தேர்வு நடைபெற்றது. அதில், தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பிற்கு சென்றேன். பணி ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களுக்கான அறிவிப்பு 8 ஜூலை 2022 வெளியானது. அதில் எனது பெயர் இடம் பெறவில்லை.


நான் இந்த பணிக்கு தேர்வு செய்யப்படாததற்கு முறையாக தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் தேர்வு செய்யப்படாததே. முறையாக 1ஆம் வகுப்பு  முதல் 12ஆம் வகுப்பு வரை மற்றும் கல்லூரியில் நேரடியாக சென்று தமிழ் வழி பயின்று இருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு தேர்வு செய்யப்படாமல் கல்லூரியில் மட்டும் தமிழ் வழியில் பயின்றவர்கள், தொலைநிலைக் கல்வியியல் தமிழ் வழியில் பயின்றவர்கள் இந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது ஏற்கத்தக்கது அல்ல.


எனவே, அரசு பாலிடெக்னிக் ஆசிரியர் பணியில் கணிதம் பிரிவில் ஒரு இடம் ஒதுக்கீடு செய்யவும், மேலும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களுக்கான அறிவிப்பை ரத்து செய்து முறையாக தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான ஒதுக்கீடு செய்து பின் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும்." என கூறியிருந்தார்.


இந்த மனு நீதிபதி சந்திரசேகர், முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வழக்கு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் சேர்மன் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண