சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு அனைத்து உயிரினங்களின் பங்களிப்பும் அளப்பரியது. இதில் பறவை இனங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. பறவை இனங்களை பொறுத்தவரை 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியவை. ஆனால் இன்றளவும் பூமியில் உள்ள பல சுற்றுச்சூழல் மண்டலங்களில் முதன்மை உயிரி இனங்களாக உள்ளது. பறவைகளால் மனித குலத்திற்கு அளவிட முடியாத பல நன்மைகள் தொடர்ந்து கிடைத்துக்கொண்டே வருகிறது.



‘என்ன அழகு எத்தனை அழகு...’ பெரியாறு புலிகள் காப்பகத்தில் புதிய வகை பறவை இனங்கள் கண்டுபிடிப்பு


குறிப்பாக தீங்கு விளைவிக்கும் பல பூச்சிகளை விவசாய நிலங்களில் இருந்து அழிப்பதன் மூலம் வேளாண் உற்பத்திக்கு பெரும் பங்காற்றி வருகிறது. இதனை பொருளாதார அடிப்படையில் பார்த்தால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்க பறவைகளே காரணமாக இருக்கிறது.  இது ஒரு புறம் இருக்க, பறவைகள் குறித்த ஆய்வுகளும் ஆண்டுதோறும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.  அவ்வாறு கேரள மாநிலம் தேக்கடி பெரியாறு, பம்பா, அழுதா, வல்ல கடவு உள்ளிட்ட ஐந்து வனச்சரகங்களைக் கொண்டது பெரியாறு புலிகள் காப்பகம்.  925 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு 2008, 2018, 2019, 2024 ஆகிய ஆண்டுகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது.


TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?


சரணாலய இயக்குனர்கள் தலைமையில் பறவை ஆராய்ச்சியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். குறித்து வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் பெரியாறு புலிகள் சரணாலயம் பறவைகள் வசிக்கும் வசதிகள் உள்ள வனப்பகுதியாகும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருக்கும் தட்பவெப்ப நிலை இந்த வனப் பகுதியில் ஒரு கேள்வி உள்ளது, இதனால் இமயமலையை ஒட்டி வாழும் பறவை இனங்களும் இங்கு வந்து வசிக்கும் நூறு ஆண்டுகளுக்கு முன் இங்கு பார்த்த காஷ்மீர் பூச்சி பிடிப்பான்( காஷ்மீர் பிளை கேட்சர்) என்ற அரிய வகை பறவை தற்போது கணக்கெடுப்பில் பார்க்கப்பட்டது.


இந்த நிலையில்  தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி இந்தாண்டு ஜனவரி 29ஆம் தேதியில் துவங்கியது. பறவைகள் வாழ்விடத்தில் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 28 இடங்களில் இக்கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.




கேரளா வேளாண் பல்கலை பெங்களூர் வனவிலங்கு ஆய்வு மையம், கேரள கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கு, அறிவியல் பல்கலை, மலபார் கிருத்துவக் கல்லூரி மாணவர்கள் திருவனந்தபுரம் ஓடோனாட் ஆய்வுகள் சங்கம், கோட்டயம் இயற்கை சங்கம், மலபார் விழிப்புணர்வு மற்றும் மீட்பு மையம் உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் 54 பேர் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.  இவர்களுடன் வனத்துறையினரும் கலந்து கொண்டனர்.


கணக்கெடுக்கும் பணி நிறைவடைந்த நிலையில் பறவைகள் அடையாளம் காணப்பட்டு பதிவு செய்யப்பட்டன. இதில் அழிந்து போகும் அபாயத்தில் இருக்கும் 16 வகை இனங்களும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் அட்டவணை 1ல் சேர்க்கப்பட்ட 33 வகையான பறவைகளும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் 24 வகையான பறவைகளும் அடங்கும். இதில் ப்ளூத்ரோட் (லூசினியா ஸ்பெசிகா) அல்ட்ராமைன், பிளை கேட்சர் (பிசெடுலா சூப்பர் சிலியா ரிஸ்) ரெட் பிரெஸ்டட் பிளைகேட்சர் (பிசெடுலா பர்வா) டாவ்னி பிபிட்(அந்தஸ் கேம்பஸ்ட்ரிஸ்) ஆகிய நான்கு வகை புதிய பறவை இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன்மூலம் பெரியார் புலிகளை காப்பகத்தில் இதுவரையில் 345 பறவை இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆய்வுக் குழுவினர் தெரிவித்தனர்.