நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வாகனத்தின் மீது செருப்பு வீசியதாகவும், தரக்குறைவாக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட மதுரையை சேர்ந்த மணிகண்டன், கோகுல் அஜித், வேங்கைமாறன்  உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமின் கோரி மனு அளித்தனர்.


இந்த மனு விரைவில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வர உள்ளது. அதில், " ஆகஸ்ட் 13ஆம் தேதி  வீர மரணம் அடைந்த மதுரை புதுப்பட்டி சேர்ந்த இந்திய ராணுவ வீரர் லட்சுமணன் உடல் மதுரை விமான நிலையம் வந்தது.


ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல்வேறு கட்சியைச் சார்ந்தவர்கள் மதுரை விமான நிலையம் வந்திருந்தனர். அப்பொழுது தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்களின் வாகனம் வாகனம் வந்த பொழுது கூட்டத்திலிருந்து செருப்புகள் வீசப்பட்டது.  இந்த வழக்கு தொடர்பாக 2022 ஆகஸ்ட் 14ஆம் தேதி மாணிக்கம் நடராஜன் மற்றும் சுதாநாகுலு கைது செய்யப்பட்டு கீழமை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். அங்கு அவர்களிடம் பிணையம் பெற்று கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.


மேலும் இந்த செயலில் நாங்கள் ஈடுபடவில்லை. எங்கும் தலைமறைவு ஆகவும் இல்லை. இந்த வழக்கிற்கு தேவையான பிணையம் வழங்க தயாராக உள்ளோம். எனவே, எங்களுக்கு 3 நபர்களுக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தனர். இந்த மன உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.


 




மற்றொரு வழக்கு


பதவி உயர்வு கோரிய வழக்கில் உரிய நேரத்தில் பதில் மனு தாக்கல் செய்யாததால் ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர் அமுதா மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர். ஜானி டாம் வர்கிஸ் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.


செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சிறப்பு அதிகாரியாக தமிழ்நாடு அரசால் நியமனம் செய்யப்பட்டதன் காரணமாக  காலதாமதம் ஏற்பட்டு விட்டது என அரசு தரப்பில் தெரிவித்ததை ஏற்று இனி நேரில் ஆஜராக தேவையில்லை என  நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.


ராமநாதபுரம்  சேர்ந்த ராஜேந்திரன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "1988இல் குரூப்4 தேர்வில் தேர்ச்சி பெற்று ஏறத்தாழ 34 ஆண்டுகள் பணியாற்றி வருகின்றேன். தற்பொழுது முதுகுளத்தூர் திட்ட மேம்பாட்டு அலுவலராக பணிபுரிந்து வருகிறேன். கடந்த 2020 ஆம் ஆண்டு ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் வெளியிட்ட பதவி உயர்வுக்கான அறிவிப்பில் எனது பெயர் முப்பதாவது இடத்தில் இருந்தது. இந்நிலையில் மீண்டும் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஊரக வளர்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளர் பதவி உயர்வு தொடர்பாக வெளியிட்ட அரசாணையில் எனது பெயர் 11-வது இடத்தில் இருந்தது. ஆனால் இன்று வரை எனக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. அதற்கான காரணம் கேட்ட பொழுது எல்இடி விளக்குகள் பொருத்தியதில் முறைகேடு நிகழ்ந்ததாகவும் அதன் அடிப்படையில் என் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை என வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டது. இதுவரை அதற்கான விவரங்கள் எதுவும் எனக்குத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் என்னை விட அனுபவம் குறைந்த பலருக்கு உதவி இயக்குனராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை. ஆகவே தமிழக ஊரக மேம்பாட்டு துறை முதன்மைச் செயலர் வெளியிட்ட அரசாணை அடிப்படையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் உதவி இயக்குனராக பதவி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.


இந்த வழக்கில் விசாரணை செய்த நீதிபதி ரமேஷ் மனுதாரருக்கு பதவி உயர்வு வழங்காதது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்து இருந்தார். ஆனால் அரசு தரப்பில் அறிக்கையை தாக்கல் செய்ய கால தாமதம் ஏற்பட்டதால் வழக்கில்  ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர். அமுதா மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர். ஜானி டாம் வர்கிஸ். நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.


இன்று வழக்கு விசாரணையின் போது ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அமுதா மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் திருமதி அமுதா அவர்கள் தமிழக அரசால் செஸ் விளையாட்டு சிறப்பு அதிகாரிய நியமனம் செய்யப்பட்டதால் கால தாமதம். ஏற்பட்டுவிட்டது ஆகையால் உரிய பதில் அளிக்க முடியவில்லை என்றார். மேலும் அரசு தரப்பில் அரிசி தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது.


இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் இந்த வழக்கில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு்  செப்டம்பர் 13ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.







ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண