திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அறநிலையத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நேற்று காலை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் வாழ்த்துரை வழங்கி துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் பெரியசாமி ,சேகர் பாபு ,சக்கரபாணி ,ஆதீனங்கள் , நீதிபதிகள் முன்னிலையில் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவு, ஆன்மீக கருத்தரங்கம் ,ஆன்மீக பாடல்களுக்கு நடனம் என தொடர்ந்து விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது.


பரபரப்பு! மோடிக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான்! இஸ்லாமாபாத் செல்கிறாரா இந்திய பிரதமர்?




தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று தொடர்ந்து முப்பது மணி அளவில் பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். தொடர்ந்து காலை முதல் ஏராளமான பொதுமக்கள் மாநாட்டு நடைபெறும் இடமான பழனி ஆண்டவர் கலைக்கல்லூரி முன்பு பொதுமக்கள் ஆர்வத்துடன் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து இன்று ஆன்மீக சொற்பொழிவு, ஆன்மீக கருத்தரங்கம் ,பட்டிமன்றம், கும்மியாட்டம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் இன்று அருணகிரிநாதர் அரங்கில் நடைபெறுகிறது.


Watch Video : கலக்குறியே மாயா! உனக்குள் இப்படி ஒரு திறமையா... வாய் பிளக்க வைக்கும் வீடியோ




 தொடர்ந்து பொதுமக்கள் அறுபடை முருகனை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட சிலைகளை முருகனின் வரலாற்று கதைகளை கூறும் வகையில் அமைந்துள்ள படங்களையும், 3டி தொழில்நுட்பத்தில் அமைந்துள்ள திரைப்படத்தையும் ,முருகனை அருகில் இருந்து காணும் வகையில் உள்ள வி ஆர் கண்காட்சியையும் பார்வையிட இன்று பொதுமக்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.  


HBD Vijayakanth: கேப்டன் இல்லாத முதல் பிறந்தநாள்! இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்!


மேலும் வருகை தரும் அனைவருக்கும் பிரசாதம் பைகளும் , அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.  தொடர்ந்து போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டு இருக்கின்றனர். தொடர்ந்து கண்காட்சி ஆரம்பம் 30ஆம் தேதி வரை செயல்படும் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.