பழனி முருகன் கோவில்:

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்கள் செலுத்தி வருகின்றனர். தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இந்த அறுபடை வீடுகளில் மூன்றாம் படை திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயிலாகும்.

Lok Sabha Elections 2024: “மோடி ஒன்றும் செய்யவில்லை; அவர் தோற்கடிக்கப்பட வேண்டும்” - சுப்ரமணியசாமி பரபரப்பு பேட்டி!

இக்கோவில் சிறப்புகளான தைப்பூச திருவிழா, சஷ்டி விரதம் என பல்வேறு சிறப்பு விழாக்களுக்கு பிரசித்தி பெற்றது இந்த பழனி முருகன் கோவில். அப்படி கொண்டாடப்படும் விசேச நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பாதயாத்திரையாக பழனிக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

Lok Sabha Election 2024: திருச்சியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்: ஒரே மேடையில் 40 வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் இபிஎஸ்

பங்குனி உத்திரம் திருவிழா :

பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத்திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திரத்திருவிழாவை முன்னிட்டு கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து, பாதயாத்திரையாக வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனுக்கு தீர்த்தம் செலுத்தி வழிபடுகின்றனர்.

தேரோட்டம்:

பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெறும் திருவிழாவின் ஆறாம் நாளான நேற்று முத்துகுமாரசுவாமி ,வள்ளி,தெய்வானை திருக்கல்யாணமும்,  திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திரத் தேரோட்டம் இன்றும் நடைபெற்றது. இன்று மாலை 4.மணிக்கு மேல் அருள்மிகு முத்துக்குமாராசாமி-வள்ளி,தெய்வானையுடன், அலங்கரிக்கப்பட்ட  திருத்தேரில் பழனி அடிவாரம் வடக்குகிரிவீதியில் இருந்து நான்கு கிரிவீதிகளிலும் வலம் வந்து அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து திருத்தேரை இழுக்க, அருள்மிகு முத்துக்குமாரசாமி,வள்ளி தெய்வயானை சமேதராக‌ தேரில்  எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

Lok Sabha Elections 2024: “மோடி ஒன்றும் செய்யவில்லை; அவர் தோற்கடிக்கப்பட வேண்டும்” - சுப்ரமணியசாமி பரபரப்பு பேட்டி!

தேரோட்டத்தில் பழனி கோவில் இணைஆணையர் மாரிமுத்து, அறங்காவலர் தலைவர் சந்திரமோகன் ,அறங்காவலர் குழுவினர், கோட்டாட்சியர் சரவணன், திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் பிரதீப் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். வருகின்ற 27 ஆம் தேதி கொடி இறக்க நிகழ்ச்சியுடன் பங்குனி உத்திர திருவிழா நிறைவடைகிறது.