பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வருகின்ற 8ம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு அன்று மதியம் 2.30 மணிக்கு மேல் கோவில் நடை அடைக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


Varisu First Single Ranjithame: அடுத்த ஹிட் ரெடி..! வெளியானது ‘ரஞ்சிதமே’ பாடல்..! விஜய் வாய்ஸில் பாட்டு எப்படி இருக்கு?


திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் மலைக்கோவிலில் வருகின்ற 8ம்  தேதியன்று செவ்வாய்க்கிழமை பௌர்ணமி திதி, பரணி நட்சத்திரத்தில் சந்திர கிரகணம் மாலை 5.47 மணிக்கு தொடங்கி 6.26 மணிக்கு முடிவடைவதால் அன்றைய தினம் மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை முடிந்தபின் பிற்பகல் 2:30 மணிக்கு அனைத்து சன்னதிகளும் அடைக்கப்படும் எனவும் அன்று காலை 11:30 மணி முதல் படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில், ரோப்கார் சேவை இயங்காது எனவும் அனைத்து டிக்கெட்டுகளும் நிறுத்தப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Sabarimala Mandala pooja 2022 : நவம்பர் 16-ந் தேதி சபரிமலை மண்டல மகரவிளக்கு யாத்திரை தொடக்கம்..! ஆனந்தத்தில் பக்தர்கள்..


BENGALURU : மசால் தோசை, மசால் தோசை தான்..! பெங்களூர் உணவகத்தை பாராட்டிய ஸ்டார்பக்ஸ் இணை நிறுவனர்...


மேலும், சந்திர கிரகணம் முடிவுற்றதும் மாலை 7 மணிக்கு மேல் சம்ப்ரோசன,  பூஜை நடைபெற்ற பின் சாயரட்ஜை பூஜையும் தொடர்ந்து தங்கரத புறப்பாடு  அதன் பின்னர்  ராக்கால பூஜையும் நடைபெறும். இரவு 7 மணிக்கு மேல் வழக்கம்போல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண