திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். அறுபடை வீடுகளில் ஒரு வீடு பழனி முருகன் கோயிலாகும். இங்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வருகை தருவார்கள். பங்குனி உத்திரம், ஆடி கிருத்திகை, சஷ்டி, சூரசம்ஹாரம் ஆகிய விஷேச நாட்களின் பக்தர்கள் அலைகடலாய் திரண்டு வருவார்கள். இங்கு பக்தர்கள் எந்த சிரமமுமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பழனி மலை தண்டாயுதபாணி கோயிலுக்கு செல்ல படிப்பாதை, யானை பாதை, விஞ்ச், ரோப் கார் ஆகிய வசதிகள் உள்ளது.
AR Rahman: நிறைவேறாமல் போன ஆஸ்கர் நாயகன் ஆசை! விவாகரத்து குறித்து மௌனம் கலைத்த ஏ.ஆர்.ரகுமான்!
கோயிலுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் மலை உச்சியை அடைய வசதிக்காக அடிவாரத்திலிருந்து மின் இழுவை ரயில் மற்றும் ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான பக்தர்கள் ரோப்கார் மூலம் செல்லவே விரும்புவர். இயற்கை ரசித்தபடி 3 நிமிட கால அவகாசத்தில் அடிவாரத்திலிருந்து மலை கோவில் செல்வதால் ரோப்காரை பக்தர்கள் விரும்பி செல்கின்றனர். ரோப் கார் பராமரிப்பு பணிக்காக தினமும் ஒரு மணி நேரமும், மாதத்துக்கு ஒரு நாளும், வருடத்துக்கு ஒரு மாதமும், பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம்.
இந்த ரோப்கார் மாதத்தில் ஒரு நாளும் வருடத்தில் ஒரு மாதமும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுகிறது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி முதல் 43 நாளுக்கு வருடாந்திர பராமரிப்புக்காக நிறுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. புதிதாக 6 லட்சம் மதிப்பிலான இரும்பு கம்பிகள் மற்றும் சாப்டுகள் புதிய பேரிங்குகள், மாற்றப்பட்டு பெட்டிகளுக்கு புது பொலிவு செய்யப்பட்டு இன்று முதல் பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
நடுவானில் வந்த மாரடைப்பு! 2 ஆண்டுகளுக்கு பிறகு வீட்டுக்கு வந்த பெண் மரணம் - சோகத்தில் கள்ளக்குறிச்சி
இதற்காக ரோப் கார் பெட்டிகளுக்கும், மோட்டார்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பூசணிக்காய் சுற்றப்பட்டு ரோப்கார் இயக்கப்பட்டது . 43நாட்களுக்குப் பிறகு ரோப் கார் பக்தர்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோவில் அதிகாரிகள் இந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர்.