அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என  பக்தர்கள் பல்வேறு தங்கள் நேர்த்திக் கடன்கள் செலுத்தி வருகின்றனர். தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இந்த அறுபடை வீடுகளில் மூன்றாம் படை திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயிலாகும் .



இந்த கோயிலுக்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து தினந்தோறும் பக்தர்கள் அதிகமானோர் வருவதுண்டு. தமிழகத்தில் அதிகமான வருவாய் தரக்கூடிய ஒரே கோவில் பழனி முருகன் கோயில். இந்த கோயிலுக்கென பல்வேறு சிறப்புகள் உண்டு என்பதால் இங்கு வந்து வழிபட்டு செல்வோர்கள் தாங்கள் வேண்டிய நேர்த்திக்கடனை செலுத்துவதற்கு அதிகம் வருவர்.


இந்த நிலையில் பழனி கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11.30மணி வரை‌ மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என திருக்கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 


Kandha Sashti : கந்தசஷ்டி மூன்றாம் நாள்.. காஞ்சிபுரம் குமரக்கோட்டம் அன்ன வாகன காட்சி.. பரவசத்தில் பக்தர்கள்..




பழனி முருகன் கோவிலில் கடந்த 25ம்தேதி கந்தசஷ்டி திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற 30ம்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு  சூரசம்ஹாரம் அன்று காலை 11.30 மணிக்கு மேல் பழனி கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது‌.


Pope : ஆபாச படங்களை பார்க்கும் பாதிரியார்கள்..போன்களில் இருந்து டெலிட் செய்யுங்க...போப் ஆண்டவர் வேண்டுகோள்..!



இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- சூரசம்காரம் அன்று அதிகாலை 4.00 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், 4.30 மணிக்கு விளாபூஜையும் நடைபெறும் என்றும், 11 மணியளவில் கட்டண பூஜைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, உச்சிகால பூஜை மற்றும் சாயரட்சை பூஜைகள் நடத்தப்பட்டு 2.45 மணியளவில் கோவில் நடை அடைக்கப்படும் என்றும்,


Prime Minister Modi: வருகிற 11-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி.. வெளியான தகவல்கள் என்னென்ன?



எனவே காலை 10 மணிக்கு மேல் ரோப்கார், மின்இழுவைரயில் ஆகிய சேவைகள் நிறுத்தப்படும் என்றும், படிவழியில் 11.30 மணிவரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்றும், சூரசம்ஹாரம் நிறைவடைந்து மறுநாள் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண