பழனியில் நகைக்கடையில் திருடிய போது சிசிடிவி உதவியால் வசமாக சிக்கினார்.  அப்பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


பழனி பேருந்து நிலையம் எதிரிலே செயல்பட்டு வரும் நவரத்னா தங்க நகைக் கடையில் நகை வாங்குவது போல வந்த பெண் ஒருவர், கடையில் தங்கச் சங்கிலிகளை பார்வையிட்டுள்ளார். அப்போது கடை ஊழியர்களை ஏமாற்றி ஒரு பவுன் தங்கச் சங்கிலியை திருடி உடைக்குள் மறைத்து வைத்துள்ளார்.


20 ஆண்டுகளாக குழந்தையில்லாத ஏக்கம்...! விபரீத முடிவெடுத்த தம்பதியினர்..! நெல்லையில் சோகம்...


DGP: தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை குற்றங்கள் குறைந்துள்ளது - டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேட்டி


தங்க நகை குறைவதை பார்த்த கடை ஊழியர்கள் சிசிடிவி கட்சிகளை ஆராய்ந்த போது புர்கா அணிந்து வந்த பெண் நகையைத் திருடுவது தெரிய வந்தது. உடனடியாக பழனி நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்து நகை திருடிய பெண்ணை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் பழனி கோட்டைமேட்டு தெருவை சேர்ந்த லதா என்பதும், நகை கடையில் திருடுவதற்காக இஸ்லாமிய பெண் போல புர்கா உடை அணிந்து கொண்டு கடைக்கு வந்ததும் தெரிய வந்துள்ளது. 




கடை ஊழியர்களை ஏமாற்றி தங்க சங்கிலியை உடைக்குள் மறைத்துக் கொண்டு தப்ப முயன்ற போது கடை ஊழியர்கள் பிடித்து வைத்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதனை அடுத்து லதா மீது திருட்டு வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். பட்டப் பகலில் நகைக் கடைக்குள் நுழைந்து பெண்மணி ஒருவர் கடை ஊழியர்களை ஏமாற்றி திருடும் சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண