உலக பிரசித்தி பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேற்று பரபரப்பாக நிறைவு பெற்று, இதுவரை இல்லாத அளவிற்கு முதல் பரிசாக கார் , பைக் உள்ளிட்டவை எல்லாம் வழங்கப்பட்டன. தை மாதம் விழாக்கோலம் காணும் மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம், இன்று பாலமேடு கிராமத்தில் நடைபெற்று வருகிறது.


 


பரந்து விரிந்த களத்தில், பாய்ந்து வரும் காளைகளை பாலமேட்டில் பார்ப்பதே ரம்யமாக இருக்கும் என்பார்கள். மாடுபிடி வீரர்களுக்கு சவாலாக அமையும் களமாக திகழும் பாலமேட்டில் இன்று காளைகள் பாய்ச்சல் பயங்கரமாகும் இருக்கும். கொரோனா ஊரடங்கு காரணமாக, கட்டுப்பாடுகளின் கீழ் காளைகளும், மாடுபிடி வீரர்களும் களமிறங்குவார்கள். முதல்நாள் அவனியாபுரத்தில் கடைபிடிக்கப்பட்ட அதே விதிமுறைகள் தான், பாலமேட்டிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. 


 



இந்நிலையில் அந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர் ஒருவர் காளைக்கு அடியில் சென்று அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.  அதாவது மாட்டை பிடிக்க முயன்ற போது அவரும் மாடும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இது தொடர்பான வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. 


முன்னதாக  பாலமேடு ஜல்லிக்கட்டின் போது பொதுமக்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் சரியாக விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் இருந்தனர். அந்த சமயத்தில் அங்கு இருந்த அமைச்சர் பி.மூர்த்தி மக்களை அறிவுறுத்தல்களை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக அவர், “ஜல்லிக்கட்டு முறையாக நடைபெற வேண்டும் என்றால் மக்கள் அனைவரும் ஒழுங்கான நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். 




ஜல்லிக்கட்டு நடப்பதற்கு முன்பாக ஒன்று பேசிவிட்டு தற்போது ஜல்லிக்கட்டு நடக்கும் போது அதை பின்பற்றவில்லை என்றால் எப்படி ஜல்லிக்கட்டை நடத்துவது. இந்த ஜல்லிக்கட்டு நடக்கனுமா வேண்டாமா” என்று மிகவும் கோபத்துடன் பேசினார். அவரின் பேச்சிற்கு பிறகு மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. 


பாலமேடு ஜல்லிக்கட்டில் தற்போது வரை மூன்று சுற்றுகள் நடைபெற்றுள்ளன. முதல் சுற்று முடிவில் (1st Batch) முடிவில் வாடிவாசலில் இருந்து  81 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.  இரண்டாம் சுற்று முடிவில் (2nd Batch) முடிவில் வாடிவாசலில் இருந்து  இதுவரை மொத்தம் 176 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.மூன்றாம் சுற்று முடிவில் (3rd Batch) முடிவில் வாடிவாசலில் இருந்து  இதுவரை மொத்தம்  221 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. அடுத்து சுற்று போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 


பாலமேடு ஜல்லிக்கட்டு நேரலையை https://www.youtube.com/watch?v=a7ScIfCfBlo காணலாம்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண