சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் 75 ஆவது சுதந்திர தின பவளவிழா பாதயாத்திரை நடை பயணத்தில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டார். சிவகங்கை காஞ்சிரங்காலில் இருந்து பாதயாத்திரை தொடங்கியது. நடைபயணமானது காஞ்சிரங்களில் இருந்து  காந்திவிதி, மரக்கடை வீதி வழியாக அரண்மனைவாசல் சென்றடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் நடை பயணத்தில்  பங்கேற்றனர். 


 





 

நடை பயணத்தில்  முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்றார். அவர் நிறைவாக பேசுகையில்..,”  

இந்திய சுதந்திரத்திற்கு போராடிய ஒரே கட்சி காங்கிரஸ் கட்சி மகாத்மா காந்தி தலைமையில்  சர்தார் வல்லபாய் பட்டேல், சுபாஷ் சந்திரபோஸ் போன்ற  தலைவர்களால்  போராடி பெற்ற சுதந்திரம் . 1947ல் இருந்து காங்கிரஸ் ஆட்சி புரிந்தது, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் வலிமை மிகுந்த நாடாக இந்தியா மாறியது. பாதயாத்திரை நடத்துவதற்கும் முக்கிய காரணம் 75 ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு காலம் முடிந்து பாஜக ஆட்சியில் கட்டுக்கடங்காத விலைவாசி  உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது . இதனை கண்டித்து இந்த நடை பயணம் மேற்கொள்கிறோம். மொத்த விலைவாசி உயர்வு 15%,  சில்லறை விலைவாசி உயர்வு 7%  இப்படி எந்த பொருளை தொட்டாலும் ஷாக் அடிக்கிறது. முன்பெல்லாம் மின்சாரத்தை தொட்டால் மட்டும் ஷாக் அடிக்கும் தற்போது எதைத் தொட்டாலும் சாக்கடிக்கிறது.



 

காய்கறி பழங்கள் ஆகட்டும், பாலாகட்டும், தயிராகட்டும், அரிசியாகட்டும்,  பருப்பாகட்டும், சமையல் எரிவாயு டீசல், பெட்ரோல் என எந்த பொருளை எடுத்தாலும் விலைவாசி உயர்வு உயர்ந்துள்ளது. இதனை  அரசு ஒத்துக் கொள்ளாது. ஆனால் ரிசர்வ் வங்கி ஒத்துக்கொள்ளும். மக்கள் பொருள் வாங்குவது  குறைந்துள்ளது. பெண்கள்  குழந்தைகள் மத்தியில் பலவீனமும் சோர்வும் எற்பட்டுள்ளது.  எல்லா தொழில் வளமும் குறைந்துள்ளது. அமைச்சர்கள் தங்கள் பெருத்த உருவங்களை, கன்னங்களை கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்தால் நாடு நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. ஏழை எளிய மக்கள் எந்த அளவுக்கு துன்பப்படுகிறார்கள், பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதையெல்லாம் இந்த இந்தப் அரசு கண்டு கொள்வதில்லை.



 

வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. ஐம்பது லட்சம் பெண்கள் வேலை இன்றி தவித்து வருகின்றனர். வேலை தேடுவதையே நிறுத்திவிட்டார்கள் 18-30 வயது இளைஞர்கள் மத்தியில் வேலை இல்லாமை  25% ஆனது.   5000 சிறுகுறு தொழில் இருந்த நகரங்களில் 500 ஆக  குறைந்துள்ளது. எத்தனை லட்சம் பேர் கோடி பேர்  வேலைகளை இழந்துள்ளார்கள் இதற்கெல்லாம்  முழு முதல்காரணம் நரேந்திர மோடி பாஜக கட்சி தான். இவர்கள் தப்பிக்கவும் முடியாது தப்பி ஓட முடியாது என்றார். விலைவாசி உயர்வு வேலையில்லா திண்டாட்டத்தால் பாதிக்கபட்டவர்களுக்காக குரல் கொடுக்க, நாங்கள் இருக்கிறோம் என்பதற்காக இந்த நடைபயணம் என்றார்.