திருத்தொண்டர் சபை  ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை மாவட்டத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்  வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. இதில் மாநகராட்சி பகுதியில் பிரத்தியேக நடைபாதைகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

 

பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் தொந்தரவு இல்லாத சாலைகளை வழங்குவதன் நோக்கமாக பிரத்தியேக நடைபாதைகள் அமைக்கபட்டு வருகிறது. மதுரை பெரியர் போருந்து நிலையம், எல்லீஸ் நகர் பஸ் ஸ்டாண்ட் முன் அமைக்கபட்டுள்ள நடைபாதைகளை கடைகாரர்கள் ஆக்கிரமிப்பு செய்திருப்பதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கபடுகின்றனர்.




 


மனு வாங்குவதில் அலட்சியம் காட்டிய ஆர்.எம்.ஓ - கரூர் ஆட்சியர் விட்ட டோஸால் அதிகாரிகள் அதிர்ச்சி


நடைபாதை ஆக்கிரப்புகளை அகற்றகோரி திகாரிகளுக்கு மனு அனுப்பினேன், நடவடிக்கை இல்லை. எனவே மனுவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உரிய உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. நடைபதை வியாபாரிகள் தரப்பில்  ஆஜரான வழக்கறிஞர்கள்," இது மக்களின் வாழ்வாதார பிரச்சனை. மேலும் மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்டு பல வருடங்களாக அங்கே கடை வைத்து நடத்தி வருகின்றனர்.



 

எனவே நீதிமன்றம் ஏற்கனவே விதித்துள்ள இடைக்கால தடையை நீக்க வேண்டும்" என வாதிட்டனர். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் நடைபாதையை ஆக்கிரமித்துள்ள கடைகளை 4 வாரங்களுக்குள் அகற்றி நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்ய மதுரை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 5 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.