பந்தல்,தேர் அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி வெளியீடு கொரோனா பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் திருக்கோவிலின் சித்திரை திருவிழாவானது பக்தர்கள் அனுமதியின்றி உள் திருவிழாவாக நடைபெற்றது. ஆதனால் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம், திக்விஜயம், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுதல், கள்ளழகர் புறப்பாடு, எதிர்சேவை போன்ற முக்கிய நிகழ்வுகள் நடைபெறவல்லை. இதனால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் பங்கேற்க முடியாமல் ஏக்கத்துடன் காத்திருந்தனர்.
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில், பங்குனி மாத திருக்கல்யாணம்
இந்நிலையில் இரு ஆண்டுகளுக்கு பின் இந்த ஆண்டு சித்திரை திருவிழா கொரோனோ பரவல் குறைந்ததன் காரணமாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அனுமதியுடன் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது. ஏப்ரல் 5ம் தேதி மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்றத்தில் துவங்கி ஏப்ரல் 16ம் தேதி கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வானது அன்றையதினம் காலை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவார் என அறிவிக்கப்பட்ட நிலையில் இதற்காக கோவில் நிர்வாகம் ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது.
சித்தரை திருவிழாவிற்கு பந்தல் அமைத்தல், பாதுகாப்பு வேலி அமைத்தல், தேர் அலங்காரம் உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி வெளியீடு. ஒன்பது லட்சத்தி 30 ஆயிரம் மதிப்பில் மூன்று வகையான பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டது கோவில் நிர்வாகம். சித்திரை திருவிழாவில் பணி செய்ய விரும்பும் நிறுவனங்கள் மார்ச் 23 தேதி மாலை 3 மணிக்குள் சீலிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளி விண்ணப்பத்தை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அதன் பிறகு மாலை 4 மணி அளவில் ஒப்பந்தப் புள்ளி யாருக்கு விடப்படும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியுள்ளனர். மேலும் ஒப்பந்ததாரர்கள் சித்திரை திருவிழாவிற்கான பணிகளை 15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் உள்ளிட்ட 14 வகையான விதிமுறைகளை விதித்து கோவில் நிர்வாகம் ஒப்பந்தப்புள்ளி வெளியீடு செய்துள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்