10 மாவட்டங்களில் ஆப்ரேசன் ஷீல்டு நடவடிக்கை மூலம் 2441 பேருக்கு பிடிவாரண்ட், கஞ்சா, புகையிலை விற்பனையில் ஈடுபட்ட 687 குற்றவாளிகள் கைது - தென்மண்டல ஐஜி தகவல்.

Continues below advertisement

10 மாவட்டங்களில் ஆபரேஷன் ஷீல்டு மதுரை தென்மண்டல காவல்துறைக்கு உட்பட்ட மதுரை, தேனி ,திண்டுக்கல், ராமநாதபுரம் சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் ஆபரேஷன் ஷீல்டு என்ற நடவடிக்கை மே 20 ஆம் தேதி முதல் நடைபெற்றது. இந்த ஆப்ரேசனில் 2,441 பேருக்கு பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. 694 பேரின் ஜாமீன் ரத்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 497 வழக்குகளில் 687 போதைப்பொருள் குற்றவாளிகள் கைது.

கஞ்சா, குட்கா புகையிலை விற்பனை தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா புகையிலை விற்பனை செய்த வழக்குகளில் 682 குற்றவாளிகள் கைது . 401 கிலோ கஞ்சா மற்றும் 4,458 கிலோ சட்டவிரோத புகையிலைப் பொருட்கள் பறிமுதல். பல்வேறு விதிமீறல்களுக்காக 55,336 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், சொத்து பிரச்சனை தொடர்பாக BNSS பிரிவு 164-ன் கீழ்  127 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ள 365 பேரிடம். நன்னடத்தைக்கான பிணைப்பத்திரம் பெறப்பட்டு குற்ற தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக  தென் மண்டல காவல்துறை ஐஜி விஜயேந்திர பிதாரி தகவல்.

Continues below advertisement