தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்திற்கு உட்பட்ட பெரியாறு அணையிலிருந்து 18ஆம் கால்வாய் மற்றும் பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்கள் ஆகியவைகளிலிருந்து ஒரு போக பாசன நிலங்களின் பாசனத்திற்கான தண்ணீரை இன்று தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் திறந்துவைத்தார்.




தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கையினை ஏற்று பதினெட்டாம் கால்வாய் பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களில் ஒரு போக பாசன நிலங்களின் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ள நிலையில் இன்று அதனடிப்படையில் பதினெட்டாம் கால்வாய் மற்றும் பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களில் ஒரு போக பாசன நிலங்களின் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.




இந்த கால்வாய்களில் வெளியாகும் தண்ணீரை கொண்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் 18ஆம் கால்வாயில் திறந்துவிடப்படும் இந்த தண்ணீரானது உத்தமபாளையம் வட்டத்திற்கு உட்பட்ட புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, பண்ணைபுரம், கோம்பை, தேவாரம்,  சிந்தலைச்சேரி, சங்கராபுரம் உள்ளிட்ட மற்றும் அதனை சுற்றியுள்ள 21 கண்மாய்கள் வாயிலாக 2045.35 ஏக்கர் பாசன நிலங்கள் மற்றும் போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட மீனாட்சிபுரம், புதுச்சேரி, கோடங்கிபட்டி ஆகிய மூன்று கிராமங்களைச் சுற்றி உள்ள 4,614.25 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் இன்று முதல் 30 தினங்களுக்கு வினாடிக்கு 98 கன அடி வீதம் மொத்தம் 255 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.




அதனைப் போன்று பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்கள் மூலம் திறந்துவிடப்படும் தண்ணீர், உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட சின்னமனூர், வேப்பம்பட்டி, சீலையம்பட்டி, உள்ளிட்ட கிராமங்களைச் சுற்றியுள்ள பகுதிகளையும் சேர்த்து 830 ஏக்கர் நிலங்களும் தேனி வட்டத்திற்கு உட்பட்ட பூமலைகுண்டு,  தர்மபுரி கொடுவிளார்பட்டி ஆகிய கிராமங்களைச் சுற்றியுள்ள 4316 ஏக்கர் நிலங்களும் என மொத்தம் 5,146 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் இன்று முதல் 120 தினங்களுக்கு வினாடிக்கு 500 கனஅடி வீதம் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பொறுத்து இன்று முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.




இதனால் பதினெட்டாம் கால்வாய் பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை வேளாண் பெருங்குடி மக்கள் சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற்று பயனடையலாம்  என தேனி மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


 


''இந்த வேளாண் பட்ஜெட்ல எங்களுக்கு ஒன்னுமே இல்ல'' - புலம்பும் தென் மாவட்ட விவசாயிகள்!