பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கடந்த 2006 முதல் செயல்பட்டு வருகிறது. பல்வேறு விசயங்களுக்கு குரல் கொடுக்கும் அமைப்பாகவும் செயல்பட்டு வந்தது. குறிப்பாக சிறுபான்மையினர் பிரிவில் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு, கல்வி, வேலை வாய்ப்பு, இஸ்லாமியர் ஒடுக்குமுறை என இஸ்லாமியர்கள் சார்ந்த பிரச்னைகளுக்கு முன் நின்றது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் எம்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் கடலூர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு உள்ளவர்கள் சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து திடீரென இந்த அமைப்பு தடை செய்யப்பட்டது. இந்நிலையில் சிவகங்கையில் விக்னேஸ்வரன் என்பவரது வீட்டில் NIA அதிகாரிகள் 3 பேர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஓட்டுனராக பணிபுரியும் விக்னேஸ்வரன் விடுதலை புலிகள் அமைப்பினரின் தொடர்பு இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்