1. வெளிநாடுகளில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருபவர்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தி ஒமைக்ரான் பரிசோதனை மேற் கொள்ளப்படும் என சுகாதாரத்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

 

2. வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள உபரிநீர் ராமநாதபுரம் பெரிய கண்மாயில் தேக்கி வைக்க கலெக்டர் சங்கர்லால் குமாவத் நேரில் ஆய்வு செய்தார்.

 

3. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கருவறை முன்பாக உள்ள அர்த்த மண்டபத்தில்  லேசான அளவு தீ பற்றியுள்ளது. நெய் தீபத்தால் மேட் லேசாக எரிந்து தானாக அணைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

4. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள கல்லூத்து கல்யாணிபட்டி விலக்கில், டாஸ்மாக் திறக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.

 

5. மதுரை வண்டியூர் பகுதியில் பத்து வயது சிறுவனை தன்பாலீர்ப்புக்கு கட்டாயப்படுத்தி உட்படுத்திய மதுரை விளாங்குடி பகுதியைச் சேர்ந்த 35 வயதான முத்துக்குமார் என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மதுரை மாவட்ட குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்ட வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட் தீர்ப்பு

 

 

6. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே ஒப்பந்ததாரர் சாலை நடுவே கொட்டிவைத்த ஜல்லிக்கற்கள் சறுக்கியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் உயிரிழந்தார்.

 

7. திண்டுக்கல் மாவட்டத்தில் விபத்தில் சிக்கியவர்களை ஒரு மணிநேரத்தில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசென்று காப்பாற்றியவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

 

8.தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. இந்நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (2ம் தேதி) ஆய்வு மேற்கொள்கிறார்.

 

9. தேனி கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள் 1801 பேருக்கு ரூ.55 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் நேற்று வழங்கப்பட்டது.


 

10. நெல்லை மாவட்டம் வீரநல்லூர் அருகே தொழிலாளர் கொலை வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.