பாமக எங்கள் கூட்டணியில் இணையும். தேமுதிகவும் எங்கள் கூட்டணியில் இணையும் என நம்பிக்கை உண்டு.
 
மதுரைக்கு அமித்ஷா வருகை
 
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜூன்-8 நாளை மறுநாள் மதுரை ஒத்தக்கடையில் நடைபெறும் மாநில நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்பதை முன்னிட்டு, அதற்கான முகூர்த்தக்கால் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்பார்வையில் நடைபெற்றன.
 
நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பு
 
பின்னர் அவர் அளித்த பேட்டி..,” அமித்ஷா நாளை இரவு மதுரை வருகிறார். நாளை மறுநாள் மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று விட்டு மாலையில் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
 
அமித்ஷாவை சந்திக்கிறாரா அன்புமணி?
 
அமித்ஷா - அன்புமணி சந்திப்பு குறித்து இதுவரை திட்டம் இல்லை
 
ராமதாஸ் - அன்புமணி சமரச பேச்சுவாரத்தைக்கு குருமூர்த்தியை பாஜக அனுப்பியதா?
 
சமரசம் என்ற வார்த்தையில் எங்களுக்கு நம்பிக்கை உண்டு. குருமூர்த்தி நாட்டில் நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என முயல்கிறார். அவர் ஒரு நலம்விரும்பி.
 
அதிமுக - பாஜக கூட்டணியில் பாமக, தேமுதிகவின் நிலை என்ன?
 
பாமக எங்கள் கூட்டணியில் இணையும். தேமுதிகவும் எங்கள் கூட்டணியில் இணையும் என நம்பிக்கை உண்டு.
 
அமித்ஷாவால் தமிழ்நாட்டை ஒன்றும் செய்ய முடியாது என முதல்வரின் விமர்சனம் குறித்து...?
 
திமுகவுக்கு "ஷா" என்றால் பயம். அமித்ஷா தான் மகாராஷ்டிராவில் ஆட்சியை கொண்டு வந்தவர்” எனவும் தெரிவித்தார்.