தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருவதன் நிலையில் தமிழகத்தில் கூடுதல் தளர்வின்றி ஊரடங்கு விதிகள் மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு என தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, நோய் தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
இதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் நோய்தொற்று சூழ்நிலையை கருதி தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதலின்படி அரசு அறிவித்த வழிமுறை நெறிமுறைகளின்படி திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பிரபலமாக ஆன்மிக ஸ்தலமாக விளங்கும் அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் ஆடிக்கிருத்திகை மற்றும் ஆடி பதினெட்டாம் நாள் பெருவிழாவை முன்னிட்டு அதிக அளவிலான பக்தர்கள் கூடுவார்கள் என்பதை கருதி மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் விதமாக கொரோனா வைரஸ் நோய் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும் நிலையில் 2.8.2021 மற்றும் 3..8.2010 ஆகிய நாட்களில் திருக்கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது .
எனவே இரண்டு நாட்கள் பொதுமக்கள் பழனி முருகன் கோவிலுக்கு வருகை தர வேண்டாம் என திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதேபோல் தேனி மாவட்டத்திலும் வரும் இரண்டாம் தேதியும் மூன்றாம் தேதியும் ஆடிப்பெருக்கு நாளான அன்று கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது .அதேபோல் வரும் 8-ஆம் தேதி ஆடி அமாவாசை நாளை முன்னிட்டும் அன்றும் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் விதமாக தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து திருக்கோவில்களிலும் 2.8.2021 முதல் 8.8.2021 முடிய ஏழு நாட்களுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும் ஆற்றங்கரைகளில் திதி மற்றும் தர்ப்பணம் செய்ய அனுமதி இல்லை என தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
கேரளாவில் முழு ஊரடங்கு எதிரொலி - தமிழக கேரள எல்லையில் கெடுபிடி காட்டும் கேரள போலீசார்