திமுக கூட்டணிக்கு மேலும் பல கட்சிகள் வரும் எனவும் குறிப்பாக அன்வர் ராஜாவைப் போல ஓபிஎஸ் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என கூறியிருக்கிறார் திமுக துணை பொது செயலாளர் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் மான ஐ பெரியசாமி .
பொதுமக்களின் கோரிக்கைகளை அதிகாரிகளை நேரடியாக சென்று பெற்றுக்கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் முதல்வரின் முகவரி துறை சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் அகரம் பேரூராட்சி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் அகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமினை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும் திமுக துணை பொது செயலாளர் ஐ பெரியசாமி துவக்கி வைத்து பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றதோடு உடனடியாக சில பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார் .
நிகழ்ச்சியில் பேசிய அவர் இதுவரை இல்லாத அளவு ஒரு முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்படும் விண்ணப்பங்களின் நிலை குறித்து கேட்டு அறிந்து வருகிறார். தமிழகத்தில் தற்போது ஒரு கோடியே 15 லட்சம் மகளிருக்கு மகளிர் உரிமை தொகையை வழங்கப்படும் நிலையில் இந்த முகாமில் பெறப்படும் மனுக்கள் நேரடியாக முதல்வரின் கவனத்திற்கு சென்று அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வரவு வைக்கப்படும். மேலும், பட்டா மாறுதல் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக நிறைவேற்றப்படும் என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்திற்கு வருகை தந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி மூன்று லட்சம் கோடி ரூபாயை கடந்த 11 ஆண்டுகளில் தமிழகத்திற்கு வழங்கியதாக கூறி இருக்கிறார். ஆனால் தமிழகத்திலிருந்து எவ்வளவு நிதி மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி வரி மூலம் சென்றது என்பதை சொல்ல தயாரா இந்திய அளவில் அதிக அளவில் வரி செலுத்தும் மாநிலமாக தமிழகம் இருந்தாலும் கொடுப்பதையே மத்திய அரசு வாடிக்கையாக வைத்திருக்கிறது இன்னும் கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதி வழங்கப்படவில்லை. மேலும் ,மத்திய அரசின் நிதி வழங்கப்படாததால் மாநில அரசின் பல்வேறு செயல்பாடுகள் முடக்கப்பட்டு இருக்கிறது. ராஜேந்திர சோழனுக்கு சிலை அமைக்கப்படும் என பிரதமர் கூறுகிறார்.
வித்யாவுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே அடையாளம் ராஜேந்திர சோழன் தமிழ்நாடு இந்தியாவுக்கே மட்டுமல்லாமல் உலகுக்கு வழிகாட்டியாக இருக்கிறது. தேர்தல் நேரத்தில் தமிழர் அடையாளங்களை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு பாஜகவும் முனைகிறது. அனைவரும் திமுக ஆட்சி மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். வரும் தேர்தலில் பொதுமக்களின் ஆதரவு திமுகவுக்கு முன்பு நிச்சயம் திமுக தான் ஆட்சி அமைக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா திமுகவுக்கு வந்திருக்கிறார். ஓபிஎஸ் வருவாரா என்ற கேள்விக்கு ஓரணியில் தமிழ்நாடு என சொல்லி இருக்கிறோம் அனைவரும் ஓரணியில் வருவார்கள் என்றார்.