இந்தியாவில் மிகப்பெரிய இலக்கிய விழா ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது அந்த விழாவை 2024 ஜனவரியில் மதுரையில் நடத்த திட்டமிட்டு வருகிறோம் - மதுரையில் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு.
மதுரை தமுக்கம் மைதானத்தில் 2023 -ம் ஆண்டுக்கான புத்தகத் திருவிழாவை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தார். இவ்விழாவில் மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், "புத்தகத்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். நான் சிறு வயதில் நான் வாரத்திற்கு இரண்டு புத்தகங்கள் படிப்பேன். எழுத்தாளர்களுக்கும் புத்தகங்களுக்கும் நம் கலாச்சாரத்தில் இருக்கிற மரியாதை வேற யாருக்கும் கிடையாது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivagangai: தமிழி எழுத்தை பார்த்து வியந்த அரசுப் பள்ளி மாணவர்கள் ; திருமலை முதல் கீழடி வரை சுற்றுலா
திருவள்ளுவர் போல் எழுத்தாளர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு தொடர்ந்து நீடித்த மனித சமுதாய கலாச்சாரத்தில் பறிக்க முடியாத ஒரு பதிவை உருவாக்கியுள்ளார்கள். புத்தகங்கள் சமுதாயத்துக்கு பெரிய பணியை செய்து வருகிறார்கள். அந்த அடிப்படையில் இங்கே 11 நாட்கள் நடக்கும் புத்தக கண்காட்சியில், இந்த ஆண்டில் வேறு எந்த அளவிற்கு இல்லாத அளவு உள்ளது. எழுத்தும், கருத்தும் சமுதாயத்திற்கு மிக முக்கியமான வழிகாட்டி எந்த ஒரு சமுதாயம் முன்னேறுவதற்கு கல்வி அடிப்படை என்றால் அந்த கல்வியை பெருக்கும் கருவிகளாக புத்தகம் இருக்கிறது. இந்தியாவிலேயே பெரிய ஒரு இலக்கிய விழாவாக ஜெய்ப்பூரில் பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. அந்த விழாவை ஏற்பாடு செய்தவர்களோடு தொடர்பு கொண்டு அடுத்த ஆண்டு 2024இல் மதுரையிலும் ஒரு இலக்கிய விழா அவர்கள் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறேன்.
அந்த அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் உதவியுடன் ஜனவரி மாதம் நடத்தப்படுவதற்கு முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மேலும், “2000 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து மக்கள் இங்கே தங்கி அவர்கள் வாழ்க்கை முறையை சிறப்பித்து ஒரே மொழி, ஒரே இனம், ஒரே மாநகரத்தில் அந்த வரலாற்றுக்கு சொந்தக்காரர்களாக நாம் அனைவரும் இந்த இலக்கியம் தொடர்வதற்கு முயற்சி எடுக்கக் கூடிய கடமை பெற்றவர்கள். அதை அனைவரும் இணைந்து சிறப்பாக செய்து மீண்டும் மதுரை என்றைக்கும் ஒரு ஒளிமயமாக கல்வி மிக்க ஒரு எழுத்துக்களும் கலாச்சாரமும் சிறப்பாக உருவாக்கிய ஒரு மாநகரமாக வைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த விழா மிகவும் சிறப்பாக நடத்தி பல பத்தாயிரம் பார்வையாளர்கள் இங்கே வந்து பல நூல்கள் புத்தகங்கள் இங்கே விற்கப்பட்டு, படிக்கப்பட்டு சமுதாயத்தை முன்னேற்றத்திற்கு உதவும்" என்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivagangai: திருப்பாச்சேத்தியில் வாமனச் சின்னம் பொறித்த நிலதானக்கல் கண்டுபிடிப்பு ; தொல்நடை குழுவிற்கு பாராட்டு