மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் தமுக்கம் மாநாட்டு மையத்தின் உள்ள அரங்கில் கொரோனா பெருந் தொற்றால் இரண்டு ஆண்டுகளுக்கு பின்பாக "மதுரை புத்தகத் திருவிழா 2022" நேற்று துவங்கி அக்டோபர் 03 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான துவக்க விழாவில் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் நிதி மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனி தியாகராஜன் பங்கேற்று இணைந்து துவங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
புத்தகத் திருவிழா நடைபெறும் இடத்திற்கு முதலாவதாக வந்த வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி நிதி அமைச்சருக்காக காத்திருக்காமல் ரிப்பனை வெட்டி உள்ளே சென்று புத்தக அரங்குகளை பார்வையிட்டுச் சென்றார். மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த் பி.டி ஆர் ஆதரவாளர் என்பதால் அமைச்சர்
மூர்த்தி புத்தகத் திருவிழாவை ரிப்பன வெட்டி துவக்கி வைத்த போது அருகே செல்லாமல் தனித்து நின்றார். பின் புத்தகத் திருவிழா இடத்திற்கு வந்த அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ”புத்தக அரங்களை பார்வையிடாமல் நேராக மேடைக்குச் செல்லலாம்” என்றவாறு கேட்க மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் இல்லம் தேடி கல்வி அரங்கை திறந்து வைக்க அழைப்பு விடுத்தார்.
தொடர்ந்து அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை மதுரை மேயர் இந்திராணி பொன் வசந்த் வரவேற்று உள்ளே சென்று புத்தகத் திருவிழாவை குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்து, பின் இல்லம் தேடி கல்வி அரங்கை ரிப்பன் வெட்டி பார்வையிட்டு புத்தக் திருவிழா அரங்கை பார்வையிட்டனர். அமைச்சர் மூர்த்தி 6 மணி விமானத்தில் சென்னை செல்ல இருந்ததால் முன்பே வந்து புத்தகத் திருவிழா ரிப்பனை கட் செய்வதாக கூறி சென்றாலும் அமைச்சருக்காக காத்திருக்காமல் இருந்ததும்,
ஒரு அமைச்சர் நிகழ்ச்சியை துவங்கி வைக்கும் பொழுது மாநகராட்சியின் மேயர் தனியே நின்றதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாநகராட்சியின் மேயர் இந்திராணி பொன் வசந்த் பி டி ஆரின் ஆதரவாக இருந்தாலும் கூட அமைச்சர் நிகழ்ச்சியை துவங்கி வைக்கும் பொழுது கட்சியைத் தாண்டி அமைச்சருக்கான உரிய மரியாதையை வழங்கி இருக்க வேண்டும் என்பதே பார்க்க வேண்டியதாக உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்