மகா சிவராத்திரி முன்னிட்டு திருமங்கலத்தில் உள்ள ரஜினி கோயிலில் சிவன் உருவத்தில் உள்ள ரஜினியின் புகைப்படத்திற்கு 6 வீத வாசனை பொருட்கள் கொண்டு அபிஷேகங்கள் நடத்தி 101 வடை மாலை அணிவித்து சிறப்பு பூஜை நடைபெற்றது.

Continues below advertisement

மகா சிவராத்திரி -  Maha Shivratri 2025

மகா சிவராத்திரி நாளில் சிவபெருமானை வழிபடுவதும், சிவலிங்கத்திற்கு பலவிதமான பொருட்களால் அபிஷேகம் செய்வதும் ஒரு பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது. மகா சிவராத்திரி நாளில் சிவபெருமானின் ஆசியை பெற பக்தர்கள் கடுமையாக விரதம் இருந்து, இரவு முழுவதும் கண் விழிந்து, சிவனுக்கு மந்திரங்கள், சிவ புராணம் போன்றவற்றை பாராயணம் செய்வர். ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி வந்தாலும், மாசி மாதம் கிருஷ்ண பட்ச சதுர்த்தசியன்று வரும் சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த சிவராத்திரியை மகா சிவராத்திரி என்று அழைப்பர். இந்துக்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் சிவபெருமானுக்குரிய ஒரு விரதம் தான் மகா சிவராத்திரி. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் மகா சிவராத்திரி வரும். மற்ற அனைத்து சிவராத்திரிகளை விடவும், இந்த சிவராத்திரி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்நிலையில் நடிகர் ரஜிக்கு மதுரையில் தனிநபருக்கு சொந்தமான கோயில் உள்ளது. இந்த சூழலில் ரஜினி கோயிலில் சிவன் உருவத்தில் உள்ள ரஜினியின் புகைப்படத்திற்கு 6 வீத வாசனை பொருட்கள் கொண்டு அபிஷேகங்கள் நடத்தி 101 வடை மாலை அணிவித்து சிறப்பு பூஜை நடைபெற்றது.

Continues below advertisement

ரஜினி கோயிலில் பூஜை
 
மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக் இவர் தீவிர ரஜினி ரசிகர். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியை தனது குலதெய்வமாக வழிபட்டு வருகிறார். அவருக்காக திருமங்கலத்தில் ரஜினி கோயில் அமைத்து அங்கு ரஜினியின் முழு உருவ சிலை வைத்து தனது குடும்பத்தாருடன் தினமும் காலை மாலை வழிபாடு நடத்தி வருகிறார். இந்த தகவல் அறிந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அவரையும் அவரது குடும்பத்தாரையும் அண்மையில் தனது வீட்டிற்கு அழைத்து பேசினார்.
 
அரசுப் பள்ளியில் அன்னதானம்
 
இந்த நிலையில், மகா சிவராத்திரி முன்னிட்டு ரஜினி கோயிலில் நான்கு கால யாக பூஜை நடத்தி சிவன் உருவத்தில் நடிகர் ரஜினியின் புகைப்படத்தை வைத்து அதற்கு ஆறு விதமான அபிஷேகப் பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு 101 வடை மாலை அணிவித்து பூஜை செய்து குடும்பத்தினரிடம் வழிபட்டார். மேலும் ரஜினி கோவில் சார்பில் சூப்பர் ஸ்டாரின் திருமணநாளை முன்னிட்டு அருகில் உள்ள அரசுப் பள்ளியில் அன்னதானமும் வழங்கினார். இதுகுறித்து ரஜினி ரசிகர் கார்த்திக் கூறுகையில், சிவராத்திரி முன்னிட்டு எல்லோரும் குடும்பத்துடன் அவரவர் குலசாமி கோயிலுக்கு சென்று வழிபடுவார்கள் எங்களோடு குலசாமி சூப்பர் ஸ்டார் அதனால் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் நாட்டு மக்கள் எல்லோரும் மன நிம்மதியாக வாழ எல்லாம் வல்ல இறைவன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வேண்டி கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.