மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தை ஒட்டியுள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இந்நிலையில் தேனி, ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் உள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக நேற்று 71அடி உயரமுள்ள வைகை அணை 70 அடி வரை எட்டியதால் அணையில் இருந்து விநாடிக்கு 7500 கன அடியை தாண்டி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 


ADMK : சட்டமன்றத்தில் ஜனநாயக படுகொலை : அ.தி.மு.க. நாளை உண்ணாவிரதப் போராட்டம் - இ.பி.எஸ். அறிவிப்பு


இந்நிலையில் வைகை அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் மற்றும் வைகை அணையை ஒட்டியள்ள நீர்பிடிப்பு பகுதிகளான வருசநாடு, வெள்ளிமலை, மேகமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழை , முல்லைப்பெரியாறு மஞ்சளாறு மற்றும் கொட்டக்குடி உள்ளிட்ட துணை ஆறுகளில் இருந்து வெளியேறும் உபரிநீரும் சேர்ந்து வைகை அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.


Accident: குஜராத்தில் லாரி மீது சொகுசு பேருந்து மோதி விபத்து... 6 பேர் உயிரிழப்பு...


இதனையொட்டி வைகை ஆற்றில்  வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வைகை ஆறு பாய்ந்தோடும் திண்டுக்கல், தேனி, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையானது விடுக்கப்பட்டு உள்ளது. மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து காணப்படுவதால் யானைக்கல் தரைப்பாலம் முழுமையாக நீரில் மூழ்கியது. இதனையடுத்து தரைப்பாலத்தில் பொதுமக்கள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


கோவில் திருப்பணிக்கு அனுமதி; ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய அறநிலையத்துறை பெண் அதிகாரி கைது


வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ள நிலையில் வைகை ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனையடுத்து மதுரை வைகையாற்று பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் கால்நடைகளை பாதுகாப்பாக பராமரிக்கவும், கால்நடைகளை ஆற்றில் இறக்கிவிட வேண்டாம் எனவும், நீர்நிலைகளின் அருகில் கால்நடைகளை கட்டிவைக்க வேண்டாம் எனவும், மழை பெய்யும் பகுதிகளில் கால்நடைகளை மின்கம்பங்களில் கட்ட வேண்டாம் எனவும், தொழுவங்களை பாதுகாப்பாக அமைத்துகொள்ளவும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண