நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பின் தயாரிப்பாளர் போனி கபூர்- இயக்குநர் ஹெச்.வினோத் - நடிகர் அஜித் ஆகியோர் கூட்டணியில் வெளியான படம் “துணிவு”. துணிவு படம் பொங்கல் வெளியீடாக கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியானது. வலிமை படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், துணிவு படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அஜித் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது. எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், சமூகக் கருத்துடன் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த தல பொங்கலாக அமைந்து வசூலைக் குவித்து வருகிறது துணிவு.






அதே போல் பொங்கல் வெளியீடாக நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படமும் ஜனவரி 11ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. வம்சி பைடிபள்ளி இயக்கிய இப்படத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்க, ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் சரத்குமார், ஷாம், சங்கீதா, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சம்யுக்தா, பிரபு, பிரகாஷ்ராஜ், எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்த நிலையில் தமன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தது குறிப்பிடதக்கது. இப்படி துணிவும் - வாரிசு படமும் பல்வேறு கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் வாரிசு , துணிவு திரைப்படங்களை நள்ளிரவு காட்சிகளை அனுமதியின்றி வெளியிட்டதாக கூறி மதுரை மாவட்டத்திலுள்ள 34  திரையரங்குகளுக்கும் விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.




 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் விஜயின் வாரசு, அஜித் தின் துணிவு திரைப்படங்களை 11, 12,13 மற்றும் 18 ஆகிய 4 நாட்களில் காலை 09.00 மணிக்கு ஒரு சிறப்பு காட்சி நடத்துவதற்கு அனுமதி வழங்கி அரசாணையில் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து கடந்த 11ஆம் தேதியன்று  நள்ளிரவு மணி மற்றும் அதிகாலை 4 மணிக்கும் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளதாக கூறி மதுரை மாவட்டத்தில் உள்ள 34 திரையரங்குகளும் மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

 



அதில் தமிழ்நாடு திரையரங்கு ஒழுங்குமுறைச் சட்டம் 1957-ன்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது குறித்து இக்குறிப்பாணை கிடைத்த 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கப்படவில்லை என்றால், தமிழ்நாடு திரையரங்கு ஒழுங்குமுறைச் சட்டம் 1957-ன்படி தங்களது திரையரங்கின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண