கிறிஸ்தவ கொள்கை திராவிட கொள்கைக்கு பெரிய வித்தியாசம் கிடையாது. சமத்துவத்தை அடுத்தவரிடம் போதிக்க வேண்டும் என்று தான் இரண்டும் வலியுறுத்துகிறது - மதுரையில் நடைபெற்ற கிறிஸ்தவ விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.
மதுரையில் உதயநிதி ஸ்டாலின்
பெந்தெகோஸ்தே சபைகளின் மாமன்றம் சார்பில், கிறிஸ்து பிறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், மதுரை பைபாஸ் அருகே உள்ள நேரு நகரில் நடைபெற்றது. இவ்விழாவில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்து கிறிஸ்துமஸ் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் அமைச்சர்கள் மூர்த்தி, அன்பில் மகேஷ் ஆகியோர் பங்கேற்றனர். இதில், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள், பொதுமக்கள் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், அனைவருக்கும் அட்வான்ஸ் கிறிஸ்மஸ் வாழ்த்துகள்.
திமுக உறுதுணையாக இருக்கும்
கிறிஸ்தவ கொள்கை திராவிட கொள்கைக்கு பெரிய வித்தியாசம் கிடையாது. சமத்துவத்தை அடுத்தவரிடம் போதிக்க வேண்டும் என்று தான் இரண்டும் வலியுறுத்துகிறது. இவ்வளவு மகிழ்ச்சியோடு கொண்டாடப்படும். உலகம் முழுவதும் இயேசுவின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்து பிறப்பு ஒரு மாட்டு தொழுவத்தில் தான். எளிமை எனும் கருத்தை தன்னுடைய பிறப்பால் உணரவைத்தவர் தான் இயேசு அவர்கள். பல்வேறு நலத்திட்டங்களை நன்மைகளை சிறுபான்மை மக்களுக்கு செய்துள்ளது திமுக அரசு. சிறுபான்மை மக்களுக்கு எப்போதும் திமுக உறுதுணையாக இருக்கும். அவர்களும் எங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சகோதரத்துவம், சமத்துவம் மதசார்பின்மையே நம் அடையாளம். வெறுப்பு பொய் பிளவுவாத பிரச்னைகளை பிரச்சாரங்களை புறந்தள்ளி நாம் ஒரே அணியில் இணைய வேண்டும்.
இந்திய ஒன்றியத்தை ஆளும் அரசுக்கு தமிழகம் தமிழ்நாடு மீது பயம் உள்ளது
சிறுபான்மை மக்களுக்கு எதிரான அணிக்கு கூட்டங்களுக்கு எதிராக நாம் ஒன்றிணைய வேண்டும். கிறிஸ்துமஸ் திருவிழாவை மட்டும் கொண்டாடாமல் இயேசுவின் கருத்துக்களையும் நாம் கொண்டாட வேண்டும். சாதாரணமானவர்கள் உழைத்தால் உயரலாம் என்பதை நிரூபித்த தியாகம் திராவிட இயக்கம். உயர்ந்த கொள்கையான இரக்கத்தை போதிப்பது கிறிஸ்தவம். அதையே தான் திராவிடமும் கூறுகிறது. ஆனால் தமிழகம் தமிழ்நாடு மீது ஒன்றிய அரசுக்கு இரக்கம் இல்லை. கிறிஸ்துமஸ் என்றாலே நட்சத்திரம் தோரணம் வண்ண விளக்குகள் நிறைந்தது. கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் என் மீது தனி பாசம் தனி அன்பு வைத்துள்ளனர். கிறிஸ்தவ கொள்ளைகளுக்கும் திராவிட கொள்கைகளுக்கும் வேறுபாடு இல்லை. மனிதநேயம் அன்பை மட்டுமே இரண்டு கொள்கைகளும் போதிக்கிறது. இந்திய ஒன்றியத்தை ஆளும் அரசுக்கு தமிழகம் தமிழ்நாடு மீது பயம் உள்ளது. எங்கே மக்கள் ஒன்றாகிவிடுவார்கள் நம்மை எதிர்த்துவிடுவார்கள் என்ற பயம். ஒன்றிய அரசின் பாசிஸ்டுகளின் தமிழகத்தில் பிரித்தாளும் சூழ்ச்சி எடுபாடது.
தமிழகம் தனித்துவமான மாநிலம்.
சாதியால் மதத்தால் பிரித்தாள நினைக்கிறார்கள். அது நடக்காது. தமிழகம் தனித்துவமான மாநிலம். மக்களை பிரித்து பிரித்தாளும் சூழ்ச்சியால் கலவரத்தை ஏற்படுத்த முயன்றால் மக்களே தக்க பாடம் புகட்டுவார்கள். அதற்கு ஒருநாளும் மக்கள் இணங்க மாட்டார்கள். எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் ஆட்சி நடத்துகிறார் முதல்வர். பிரித்துக்கொடுப்பது என்றாலே ஒன்றிய அரசுக்கு பிடிக்கவில்லை. ஒன்றிய அரசு நிதியை பிரித்து கொடுக்காவிட்டாலும் எல்லா தேவைகளையும் நிறைவேற்றி வருகிறார் முதல்வர். பாசிஸ்ட்டுகளின் எல்லா நடவடிக்கைகளையும் தாண்டி தமிழகத்தையும் தமிழ்நாட்டையும் காப்போம். திமுகவிற்கும் சிறுபான்மை மக்களுக்கான பந்தத்தை பிரிக்க முடியாது” என்றார்.