திண்டுக்கல், சபரிமலைக்கு ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும் என்பது பல ஆண்டுகளாக தேனி மாவட்ட மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. மிக முக்கியமான ஆன்மீக ஸ்தலமான சபரிமலைக்கு தேனி வழியாகவே பல லட்சம் பேர் வருகிறார்கள்.  அதுமட்டுமல்லாமல் கேரளா அனைவருக்கும் பிடித்த சுற்றுலா தலமாகவும் இருந்து வருகிறது. இந்தநிலையில் திண்டுக்கல், சபரிமலைக்கு ரயில் பாதை அமைக்கப்படுமா? என்று தேனி எம்பி எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

Continues below advertisement

திண்டுக்கல், சபரிமலை இடையே ரயில் பாதை திட்டம் செயல்படுத்த வேண்டும் என்பது தேனி மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு ஆகும். சென்னையில் இருந்து, கோவையில் இருந்து, திருப்பூரில் இருந்து தினமும் ஏராளமான மக்கள் தேனிக்கு வந்து செல்கிறார்கள். வர்த்தக மற்றும் வணிக ரீதியான பலர் தேனி வழியாகவே கேரளாவிற்கு செல்கிறார்கள். தற்போது மதுரை வழியாக சுற்றித்தான் தேனிக்கு ரயில் பாதை உள்ளது. திண்டுக்கல் சபரிமலை ரயில் பாதை அமைக்கப்பட்டால், வத்தலக்குண்டு, பெரியகுளம் வழியாக தேனி, போடி, கம்பம், குமுளி வரை அமையும். அப்படி அமையும் போது கேரளாவின் இடுக்கி, தேனி, திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய நன்மையாக முடியும்.

Continues below advertisement

இதுபற்றி தங்கத்தமிழ்செல்வன் ரயில்வே அதிகாரிகளிடம் பேசுகையில், திண்டுக்கல் -சபரிமலை ரயில் பாதை திட்டம் செயல்படுத்த வேண்டும் என 60 ஆண்டுகளாக கோரி வருகிறோம். சபரிமலைக்கு ஆண்டுக்கு 1.5 கோடி பக்தர்களும், மாதந்தோறும் 5 லட்சம் பக்தர்கள் வந்து செல்கிறார்கள். ரயில்வேக்கு வருமானம் தரக்கூடிய இத்திட்டதை ஏன் செயல்படுத்தவில்லை. சபரிமலை வரை சாத்தியக்கூறு இல்லை என்றால் திண்டுக்கல் - பம்பை வரை, அல்லது லோயர்கேம்ப் வரை அகல ரயில் பாதை அமைக்கலாம். மிக அவசியமான இத்திட்டம் குறித்து இதுவரை என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பி இருந்தார்,

அதற்கு பதில் அளித்த ரயில்வே அதிகாரிகள், மத்திய வனத்துறையில் அனுமதி பெற வேண்டியிருப்பதால் சபரிமலை வரை ரயில் பாதை அமைக்க சாத்தியக் கூறுகள் குறைவு என்றார்கள். திண்டுக்கல் -பம்பை அகல ரயில்பாதைக்கான ஆய்வு நடத்தி உள்ளோம். வரும் ஆண்டில் மத்திய அரசிடம் இத்திட்டத்தை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்கள், இதனிடையே நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது தேனி தொகுதி தி.மு.க. எம்.பி. தங்கத்தமிழ்ச்செல்வன் ரயில்வேத்துறை தொடர்பாக கேள்வி எழுப்பினார், அப்போது அவர், 1-வது மக்களவையில் இருந்து தற்போது 18-வது மக்களவை வரை திண்டுக்கல்-சபரிமலை இடையே புதிய ரயில்வே வழித்தடம் கேட்டுக்கொண்டு இருக்கிறோம்.

அது வருமா? வராதா?. 70 ஆண்டுகளாக கேட்டுக்கொண்டு இருக்கிறோம். ஆண்டுக்கு ஒரு கோடி அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்கிறார்கள். தமிழ் மாதம் 5 நாட்கள் 5 லட்சம் பேர் செல்கிறார்கள். எனவே திண்டுக்கல்லில் இருந்து முதற்கட்டமாக லோயர் கேம்ப் வரை புதிய ரயில்பாதை அமைக்க வேண்டும் என்று கேட்டார். இதற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்தார். அவர், கேள்வி கேட்ட எம்.பி. என்னை 2 நாட்களுக்கு முன்பு இதே கோரிக்கைக்காக சந்தித்தார். நான் இதற்கான சாத்தியக்கூறு பற்றி கேட்டு இருக்கிறேன். அதிகாரிகள் முழு விவரம் தந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.