எல்லா கட்சி தலைவர்களையும் போல விஜயும் தன் தொண்டர்களை உற்சாக படுத்துவதற்காக திமுக - தவெக இடையே தான் போட்டி என்கிறார். - ஆர்.பி.உதயகுமார்.
ஆர்.பி.உதயகுமார் செய்தியாளார் சந்திப்பு
மதுரை தெப்பக்குளம் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்..,” அம்மா அவர்களே நீக்கி வைக்கப்பட்டார், TTV தினகரன் அண்ணன் அவர்கள். தற்போது தொடர்ந்து, அவதூரு பரப்பி வருகிறார். அடிப்படை உறுப்பினரிலிருந்து விலக்கி வைக்கப்பட்டவர். அதிமுக உறுப்பினர்கள் குறித்தும் அவதூறு பரப்பி வருகிறார். TTV யுடன் இருந்தவர்கள் தங்கத்தமிழ் செல்வன், செந்தில் பாலாஜி, பழனியப்பன் உள்ளிட்டோர் திமுகவில் சென்ற போது நீங்கள் ஏன் கவலைப்படவில்லை. அம்மா அவர்களுக்கு பிறகு எம்.எல்.ஏ.,உள்ளிட்ட பதவிகளின் வகிப்பவர்கள் அதிமுகவினர். மனோஜ் பாண்டியன் திமுக சென்றதற்கு காரணம் ஈ.பி.எஸ்., என்கின்றார். சென்னையில் வெற்றி மற்றும் மதுரையில் மேலூர் சாமி உள்ளிட்டவர்கள் மறைந்த நிலையில் தங்களுடைய நிலைப்பாடுதான் என்ன?
கொசுக்கடி தொல்லை தாங்க முடியவில்லை
இவருக்கு என்ன பிரச்சனை என்று நமக்கு தெரியவில்லை. பக்கத்து இலைக்கு பாயசம் என்று கிராமத்தில் சொல்லுவது போல, அவர் நிலை உள்ளது. தங்களுடைய கட்சியின் நிலை பற்றி பேச முன்வருவதற்கு எதை எதையோ பேசுகிறீர்களோ. நாள் ஒன்றுக்கு மூன்று வேலை உணவு உன்பது போல மூன்று வேளை தற்போது பேட்டி அளித்து வருகிறார். கொசுக்கடி தொல்லை தாங்க முடியவில்லை, என்னதான் வேண்டும் என்று சொல்ல மாட்டேன் என்கிறார். சவால் விடுங்கள் மக்களுக்கு சேவை செய்யுங்கள், களத்தில் சென்று பணியாற்றுங்கள் மக்கள் அதை வரவேற்பார்கள்.
அம்மா ஒதுக்கினால், ஆண்டவன் ஒதுக்கியநிலையாகும்
அம்மாவை ஒதுக்கி வைக்கப்பட்டால், ஆண்டவனால் ஒதிக்க வைக்கப்பட்டவர் என்கின்ற நிலையில், ஆளுகின்ற திமுக அரசுக்கு இபிஎஸ் சிம்ம சொப்பனமாக இருக்கும் வேலையில், வடிவேலு பாணியில் நானும் ரவுடி நானும் ரவுடி என்று சொல்வது போல, இவர் சிம்ம சொப்பனமாக இருந்து வருவதாக சொல்லுகிறார். தினகரனின் சிந்தனை தரம் தாழ்ந்த சென்று விட்டது. அம்மாவின் மறைவுக்குப் பிறகு அகதிகளாக இருந்த அதிமுக தொண்டர்களை அடையாளம் கொடுத்து, இன்று 2026ல் தமிழக முதல்வராக போகிறவர் ஈபிஎஸ்.
தரம் தாழ்ந்த விமர்சனத்திற்கு இவர் செல்வாறையானால் அதே தரம் தாழ்ந்த நிலைக்கு நாங்களும் செல்வோம்.
தை பிறந்தால் வழி பிறக்கும்
அன்புமணி ராமதாஸ் அவர்களிடம் உங்களுக்கு யார் போட்டி என்று சொன்னால் அவர்கள் திமுக என்று தான் சொல்லுவார்கள். கேப்டன் விட்டு சென்ற அந்த இயக்கத்தை கண்ணை இமை காப்பது போல, மதுரைக்கு பெருமை சேர்த்த அன்னியாரிடத்தில் கேட்டாலும் அவர்களும் திமுக என்று தான் சொல்வார்கள். எனவே
தை பிறந்தால் வழி பிறக்கும். நிச்சயம் நமக்கு திமுக வீழ்த்தப்பட வேண்டும், மன்னராட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்” எனவும் தெரிவித்தார்.