மதுரை மாவட்டம் யா.ஒத்தக்கடை அருகே திருமோகூர் பகுதியில் கோயில் திருவிழாவின் போது இரு தினங்களுக்கு முன்பாக இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக ஒத்தக்கடை காவல்துறையினர் தண்டபானி என்பவர் அளித்த புகாரின் கீழ் அதே பகுதியை சேர்ந்த மனோஜ்பிரபாகரன்,பிரபு, முகேஷ், ஆகாஷ், நேரு,மாதேஷ், சூர்ய பிரகாஷ், அருண், ஸ்ரீகாந்த், வைர பிரகாஷ், அர்ஜூன், சாந்தகுமார், சிவா, ராஜேந்திர பாண்டி, சந்துரு உள்ளிட்ட 24க்கும் மேற்பட்டோர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 12பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் இந்த மோதலில் பாதிக்கப்பட்டு காயம் அடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள திருக்குமார், பழனிக்குமார், செல்வக்குமார், மணிமுத்து ஆகிய 4 பேரையும் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த மோதலுக்கு காவல்துறையின் அலட்சியமே காரணம் என்பதால் ஒத்தக்கடை காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் சார்பாக ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காயமடைந்த நபர்களின் குடும்பத்திற்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் திருமோகூர் பகுதியில் காவல்துறையினரை அதிகளவிற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் எனக் கூறியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்திய கம்யூனிஸ்ட், ஆதி தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் முகாமில் மனு அளிக்கப்பட்டது.
ஒத்தக்கடை பகுதியில் ஏற்பட்ட பிரச்னை குறித்து தொல்.திருமாவளவன் பேட்டி படிக்க இங்கே கிளிக் செய்யவும் -’கோகுல்ராஜ் வழக்கின் தீர்ப்பு.. ஆணவக்கொலை ஆதரவுக்கு சம்மட்டி அடி’ : திருமாவளவன் எம்.பி.,
மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - 'காவேரி உரிமைக் காப்பாற்றுவதற்காக அதிமுக களத்தில் நின்று மக்களோடு மக்களாக தொடர்ந்து போராடும்' - ஆர்.பி.உதயகுமார்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்