மதுரை  நியூ எல்லிஸ் நகர் பகுதியில் டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து சிதறியதால் வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள் சேதம்.

ட்ரான்ஸ்பார்மரில் திடீரென அதிக மின்னழுத்தம்


மதுரை மாநகராட்சி பகுதியான நியூ எல்லிஸ் நகர் பகுதியில் அரசு வீட்டு வசதி வாரிய வாரியத்தின் கீழ்  கட்டப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்ட வீடுகளில் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்றிரவு அந்த பகுதியில் உள்ள மின்சார ட்ரான்ஸ்பார்மரில் திடீரென மின்னழுத்தம் அதிகமாகி ட்ரான்ஸ்பார்மர் வெடிக்க தொடங்கியது. இதனால் வீடுகளில் இருந்த மீட்டர் பாக்ஸில் அதிகளவிற்கு மின்னழுத்தம் ஏற்பட்ட நிலையில் வீடுகளில் பயன்படுத்தப்பட்ட மின்விசிறி, டிவி, ஏசி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தன.

 


மின்சாதனப் பொருட்கள் வீணானது


இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இதன் காரணமாக இரவில் பல மணி நேரமாக  மின்சாரம் இல்லாமல்  போனது. இதன் காரணமாக அப்போது மக்கள் தவித்தனர். மேலும் இது போன்ற மின்சார துறையின் தவறால் தங்கள் வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் வீணான நிலையில் அப்பகுதி மக்கள் மன வேதனைக்கு ஆளாகினர்.

 


 

இது குறித்து எல்லீஸ் நகர் பகுதி மக்கள் கூறுகையில்..,” டிரான்ஸ்பார்மர் சத்தம் வெடி போல் வெடித்தது. இதனால் எங்கள் பகுதியே பரபரப்பு ஏற்பட்டது. வீடுகளில் இருந்த எல்லா பொருட்களும் போச்சு. பழுதான வாடை அடித்தது தான் தெரிந்தது. பார்த்தால் எல்லாம் புகையாக கருகியது” என வருத்தம் தெரிவித்தனர்.