"தூய்மை பணியாளர்களின் அயராத உழைப்பை போற்றும் வகையில் அவர்கள் மூலம் இந்த தேனீர் கடையை திறந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது" எனவும் தெரிவித்தார்.

Continues below advertisement

மதுரையில் தேனீர் கடை திறப்பு விழா

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் மதுரை மாநகர் மேல பெருமாள் மேஸ்திரி வீதியில் இயங்கி வரும் மதுரை டவுன் தேநீரகத்தின் இரண்டாவது கிளை தொடங்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக  தூய்மை பணியாளர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து வரப்பட்டு திறக்கப்பட்டது. தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் சிவகங்கை சீமையார் எஸ் எஸ் நந்தகுமார் மற்றும் உரிமையாளர் மனோஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Continues below advertisement

தூய்மை பணியாளர்கள் மூலம் தேனீர் கடையை திறந்தது மகிழ்ச்சி

இது குறித்து மதுரை டவுன் தேரீநரகத்தின் உரிமையாளர்கள் சார்பில் நம்மிடம் தெரிவிக்கையில்..," மதுரையில் தேனீர் என்பது முக்கியமான ஒன்றாகும். ஏழை, எளிய மக்கள் முதல் சொகுசு காரில் செல்லும் நபர்கள் வரை தங்களை அயற்சியை போக்க தேனீர் பருகிறார்கள். பிற மாவட்டங்களை காட்டிலும், மதுரையில் தேனீருக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. இதனால் மதுரையில் இரண்டாவது பிராஞ்சை துவங்கியுள்ளோம். இந்நிலையில் தூய்மை பணியாளர்களின் அயராத உழைப்பை போற்றும் வகையில் அவர்கள் மூலம் இந்த தேனீர் கடையை திறந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது" எனவும் தெரிவித்தார்.

தூய்மை பணியாளர்களை வைத்து கடை திறப்பு விழா செய்தது மகிழ்ச்சியளிக்கிறது

மேலும் இது குறித்து கடையை திறந்து வைத்த தூய்மை பணியாளர்கள் நம்மிடம் கூறுகையில்..," கடந்த சில வருடங்களாக எங்களுக்கு எல்லா இடங்களிலும் மரியாதை கிடைக்க துவங்கியுள்ளது. சிலரைத் தவிற எங்களை பலரும் மிகவும் அன்போடு மதிக்கின்றனர். எங்களை போன்ற தூய்மை பணியாளர்கள், தங்க நகை, பணம் போன்றவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் செய்திகள் வெளிவரும் போது ஆனந்தமாக இருக்கும். இந்த சூழலில் எங்களை போன்ற தூய்மை பணியாளர்களை வைத்து கடை திறப்பு விழா செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. " என்றனர்.