பூசணிக்காய் தேங்காய்களை சாலைகளில் வீசுவதை தடுக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்கக்கோரி கையில் பூசணி தேங்காயை ஏந்தி வந்து நூதன முறையில் புகார் அளிக்க வந்ததால் பரபரப்பு. உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை.


ஆயுதபூஜை மற்றும் முக்கிய விழாக்கள் வர உள்ள நிலையில் நூதமுறையில் விழிப்புணர்வு

 

ஆயுதபூஜை உள்ளிட்ட முக்கிய விழாக்கள் வரவுள்ள நிலையில் தொழிற்சாலைகள், வீடுகள், நிறுவனங்களில் பூஜை முடித்த பின்பாக கண்திருஷ்டி போக்குவதற்காக சாலைகளில் பூசணிக்காய் மற்றும் தேங்காயை உடைப்பது வழக்கம். இது போன்ற செயல்களில் ஈடுபடும் போது உடைக்கும் பூசணிக்காய், தேங்காய்களை அப்படியே விட்டு செல்வதால் சாலைகளில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகளுக்கு விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.

 

மேலும் உடலுறுப்பு சேதம் ஏற்படுவதாகவும்,  கால்நடைகள் அதனை உண்ணுவதற்காக சாலையில் நடுவே திரிவதால் வாகனங்கள் மோதி சாலை விபத்து ஏற்படுவதாகவும் புகார்

 





 

குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்தார்.


 


இதனை தடுக்க உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக சாலைகளில் பூசணிக்காய், தேங்காய் உடைப்பதற்கு தடை விதிக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மதுரை  கொட்டாம்பட்டி பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் மதுரை மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்தார்.கையில் பூசணிக்காய், தேங்காயை ஏந்தியபடியும், கழுத்தில் கோரிக்கை அட்டையை தொங்கவிட்டபடி வந்து புகார் மனு அளிக்க வந்தது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

பூசணிக்காய், தேய்காய் போன்ற விசயங்களால் என்ன நடக்கப் போகிறது என்ற அலட்சியம் இருக்கக்கூடது.

 

இது குறித்து பேசிய கொட்டாம்பட்டி பகுதியைச் சேர்ந்த  சமூக ஆர்வலர் சரவணன்...,” சாலை விதிகளுக்கு முரணாக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வகையில் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்ட ஆட்சியர் இதனை தடுக்க வேண்டும். பூசணிக்காய், தேய்காய் போன்ற விசயங்களால் என்ன நடக்கப் போகிறது என்ற அலட்சியம் இருக்கக்கூடது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் அங்கொன்றும், இங்கொன்றுமான விபத்து சம்பவங்கள் நடைபெறுகிறது. எனவே இதனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.