முருகனுக்கு பொண்ணு கொடுத்த குறவர் சமூகத்தில் இருந்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற மனு அளிக்க வந்துள்ளோம், மனிதர்கள் மனு கொடுத்தால் குப்பையில் போய்விடும் என்பதற்காக கடவுள் வேடமிட்டு மனு அளிக்க வந்துள்ளோம் -  என பேட்டி

Continues below advertisement

கடவுள் வேடமிட்டு வந்த நபர்கள் மனு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற கோரியும், மலை உச்சியில் தீபமேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டி வலியுறுத்தியும் தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு சார்பில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக வருகை தந்தனர். நரிக்குறவ சமூகத்தினர் முருகர் வள்ளி, ராமர், ஆஞ்சநேயர் பெருமாள், நாரயணன் உள்ளிட்ட கடவுள்களின் வேடமிட்டபடி அண்ணா பேருந்து நிலைய பகுதியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக வந்தனர்.

Continues below advertisement

தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என மனு அளித்தனர்

கடவுள் வேடமிட்டபடி அரோகரா, அரோகரா என்ற முழக்கங்களை எழுப்பியவாறும் மலையில் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டியும் முழக்கமிட்டவாறு வந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலரை சந்தித்து மனு அளிப்பதற்காக சென்றபோது வேடமிட்டபடி மாவட்ட ஆட்சியர் சந்தித்து மனு அளிக்க அனுமதி இல்லை என கூறியதால் சிறிது நேரம் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினர் மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற்ற பின்பாக மனு அளிக்க அனுமதிக்கப்படும் என கூறப்பட்ட நிலை சிறிது நேரம் கழித்து மீண்டும் கடவுள் வேடமிட்ட வந்தவர்களின் கைகளில் இருந்த வேல், கடாயுதம் உள்ளிட்டவைகளை வைத்துவிட்டு வருமாறு கூறினர். இந்நிலையில் முருகர், ராமர், ஆஞ்சநேயர் வேடமிட்ட 5 பேர் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமாரை சந்தித்து திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என மனு அளித்தனர். அப்போது பதிலளித்த மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதாக மனு தொடர்பாக  பின்னர் முடிவெடுக்கப்படும் என்றார்

கடவுள் வேடமிட்டு மனு

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கடவுள் வேடமிட்டவர்கள்...,” கடவுளுக்கு ஒரு பிரச்னை என்பதால் கடவுள் வேடமிட்டது நாங்கள் மனு அளிப்பதற்காக வந்திருக்கிறோம். எங்களை பார்த்து பொதுமக்களே கும்பிடுகிறார்கள் எனவே திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறவர் சமூகத்தில் இருந்து முருகனுக்கு பொண்ணு கொடுத்துள்ளோம். எங்களது உரிமையை கேட்டு வந்துள்ளோம், தீபத்தூணில் தீபம் ஏற்றினால் எங்கள் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்பதற்காக மனு அளிக்க வந்திருக்கிறோம். மனிதர்கள் மனு அளித்தால் மனு குப்பையில் போய்விடும் என்பதற்காக, கடவுள் வேடமிட்டு மனு அளிப்பதற்காக வந்திருக்கிறோம்