”காவல்துறை உங்கள் நண்பன்” - என்ற வாக்கியத்தை உண்மையாக்கும் விதமாக தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த பலரும் நற்பெயர்கள் எடுத்துள்ளனர். ஒரு சில காவல்துறை ஊழியர்கள் செய்யும் செயலால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் கெட்ட பெயரை உருவாக்குகிறது. பல்வேறு விமர்சனங்கள் காவல்துறையினர் மீது இருந்தாலும் பொதுமக்களின் உதவிக்கும், பாதுகாப்பிற்கு காவல்துறையினர் தான் உயிர்நாடி. இந்நிலையில் காவல்துறையில் பணியாற்றிய நபர் உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்திற்கு காவலர்கள் இணைந்து பண உதவி செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கீழப்புதூரைச் சேர்ந்த சிவக்குமார் என்ற காவலர் கடந்த ஜூன் மாதம் உயிரிழந்தார். இளம் வயதில் கணவனை இழந்த பெண், தந்தையை இழந்த ஆறு மாத பெண் கைக்குழந்தை, 4 வயதில் ஒரு மகன் என அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினரை தங்கள் குடும்பத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டது போன்று அவர்களுக்கு உதவிட எண்ணிய காவலர்கள், தமிழ்நாடு முழுவதுமாக தங்களுடன் பணியில் சேர்ந்த 2009ஆம் ஆண்டு பிரிவு காவலர்கள் ஒருங்கிணைந்து ஒருவருக்கொருவர் 500 முதல் 5000 வரை தங்களால் இயன்ற உதவிகளை செய்து அதன் மூலம் சுமார் 24 லட்சம் ரூபாயை திரட்டிய காவலர்கள்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ”ஜி.எஸ்.டி விஷயத்தில் பி.டி.ஆர், அறிவு ஜீவிபோல பேசுகிறார்” : செல்லூர் ராஜூ காட்டம்..
மனைவி சங்கீதா மற்றும் சிவக்குமாரின் குழந்தைகள் பெயரில் நிரந்தர வைப்பு நிதி அவரின் தாயாருக்கு நிதி என தனித்தனியாக குடும்பத்தினருக்கு வழங்கும் நிகழ்வு உசிலம்பட்டி அருகே தி.விலக்கில் உள்ள மண்டபத்தில் வைத்து குடும்பத்தினரிடம் வழங்கினர். முன்னதாக மறைந்த சிவக்குமாரின் திரு உருவ படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி சிவக்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து எந்த கஷ்டத்திலும் உடனிருப்போம் கை கொடுப்போம் என உறுதியளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்