மதுரையில் 14 தேர்வுமையங்களில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வு தொடங்கியது. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள்  தாள் 1 தேர்வு எழுதி வருகின்றனர் - தேர்வு மையங்களில் பலத்த பாதுகாப்பு. நாளை தாள் -2 தேர்வினை 14ஆயிரத்தி 800 பேர் எழுதவுள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு
 
மதுரை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தேர்வு தாள் 1- ஐ   14 தேர்வு மையங்களில் 4249 தேர்வர்களும், ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -2  நாளை 52 தேர்வு மையங்களில் 14,800 தேர்வர்கள் தேர்வினை எழுதவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வி சார்பாக ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.
 
உரிய நபர்கள் 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கொண்டு வரவேண்டும்.
 
தேர்வர்கள் இன்று தேர்வு மையத்திற்கு வருகின்றபோது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வெளியிட்டிருந்தபடி ஹால் டிக்கெட், அடையாள சான்றுகளில் ஏதேனும் ஓர் அசல் சான்றினை எடுத்து வர வேண்டும். ஹால்டிக்கெட்டில் புகைப்படம் தெளிவில்லாமல் இருந்தால் உரிய நபர்கள் 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கொண்டு வரவேண்டும்.
 
அனுமதிச் சீட்டு இன்றி தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் நுழைய அனுமதி இல்லை
 
தேர்வறை அனுமதிச் சீட்டு இன்றி தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் நுழையவும், தேர்வு எழுதவும் அனுமதி இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் 14 தேர்வு மையங்களில் இன்று தேர்வு நடைபெறுகிறது. இதையடுத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்வு அறைக்கு செல்லும் முன்பு தேர்வர் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.