மதுரையின் பிரபல தயாரிப்பான சுங்கடி சேலைகளை மீண்டும் "ஒரு நிலையம் ஒரு பொருள்" திட்டத்தின்கீழ் மதுரை ரயில் நிலையத்தில் விற்க ரயில்வே வாரியம் அனுமதி அளிக்கப்பட்டு . இதற்காக தகுதியுள்ள தயாரிப்பாளர்களிடமிருந்து மதுரை ரயில்வே கோட்ட வர்த்தக பிரிவு விருப்பமனு கோரி தற்போது சேலை விற்பனை தொடர்ந்து ரயில் நிலையத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்  மதுரை மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகளால் உருவாக்கப்படும் சுங்குடி சேலை விற்பனையானது விறுவிறுப்படைந்துள்ளது.


 





 

 

மதுரை மத்திய சிறைச்சாலையில் 2000க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை சிறைவாசிகள் இருந்துவருகின்றனர். இங்குள்ள சிறைத்தண்டனை சிறைவாசிகள் தங்களது தண்டனை காலங்களில் அவர்களை நல்வழிப்படுத்தும் வகையில்  வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் சிறைவாசிகளின் அனுபவம், அவர்களின் தொழில் திறமைகளை வெளிப்படுத்தி பல்வேறு பொருட்களை தயாரித்து அதனை விற்பனை செய்வதற்காக மதுரை மத்திய சிறையில் சிறை அங்காடி தொடங்கப்பட்டு அதன் மூலம் சிறைவாசிகளால் உருவாக்கப்படும் பொருட்களின் விற்பனை  செய்யப்பட்டுவருகிறது.



 

சிறை அங்காடியில் சட்டைகள், ஸ்டேஷனரி , நொறுக்குத் தின்பண்டங்கள் இனிப்பு வகைகள் உள்ளிட்டவைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இதேபோன்று காய்கறிகள்,பழங்கள் போன்றவையும் இயற்கையான முறையில் விவசாயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சிறைவாசிகளால் உருவாக்கப்படக்கூடிய பல்வேறு டிசைன்களில் உருவாக்கப்படும் சுங்குடி சேலைகளுக்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் காரணமாக ஏராளமான பெண்கள் மற்றும் பெண்கள் நல அமைப்பினரும் சிறை அங்காடிக்கு சென்று சுங்குடி சேலைகளை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். மதுரையின் பெருமைகளில் ஒன்றான சுங்குடி சேலையை வாங்கி அணிவதோடு இதுபோன்ற சிறை அங்காடிகளில் வாங்கும் போது சிறைவாசிகளுடைய வாழ்வாதாரத்துக்கு உதவிடும் வகையில் இது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவதாகவும் பெண்கள் நல அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.



 

மதுரை மத்திய சிறை அங்காடியில் சுங்குடி சேலை விற்பனை அதிகரித்து வரக்கூடிய நிலையில் சுங்குடி சேலை தயாரிப்பை ஊக்குவிப்பதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மதுரை சிறைத்துறை சரக டிஐஜி பழனி தெரிவித்துள்ளார். மதுரை மத்தியசிறை அங்காடியில் சுங்குடிசேலை விற்பனையை நேரில் பார்வையிட்ட டிஐஜி பழனி பெண்கள் அமைப்பினரிடம் சுங்குடி சேலையை விற்பனையை வழங்கி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.










ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண